வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 18 செப்டம்பர், 2012

திருமலை, அம்பாறை மாவட்டங்களுக்கு தமிழ் பேசுவோரை அரச அதிபர்களாக நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் இரா.சம்பந்தன் கோரிக்கை



திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு தமிழ் பேசும் சிவிலியன்களை அரசாங்க அதிபர்களாக நியமனம் செய்வது பற்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் கேள்வியெழுப்பினார்.
ஜனாதிபதிக்கும் இரா சம்பந்தனுக்கும் இடையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை ஜனாதிபதி மாளிகையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. ஜனாதிபதியின் செயலகம் நேற்று திங்கட்கிழமை இரவு விடுத்த அழைப்பின் பேரில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக இரா.சம்பந்தன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சந்திப்பில் அமைச்சர்களான மைத்திரிபால சிறிசேன, ஜீ.எல்.பீரிஸ் ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மாகாணசபை அங்கத்தவர்களை அரசாங்கத்துடன் இணையுமாறு பல அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதாக இரா. சும்பந்தன் இச்சந்திப்பின் போது ஜனாதிபதியிடம் கூறினார். சம்பூர் மற்றும் வலிகாமம் மீள்குடியேற்றம் பற்றியும் வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கு சிவிலியன்களை ஆளுநர்களாக நியமிப்பது பற்றியும் திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு தமிழ் பேசும் சிவிலியன்களை அரசாங்க அதிபர்களாக நியமனம் செய்வது பற்றியும் இதன்போது சம்பந்தன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ஜனாதிபதி, நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கெடுக்கும்படியும் அதில் இந்த விடயங்கள் பற்றி ஆராய்ந்து தீர்வுக்கு வர முடியும் எனவும் கூறினார். இதற்கு பதிலளித்துள்ள சம்பந்தன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கெடுக்க மாட்டாது என்ற நிலைப்பாட்டை ஒருபோதும் எடுக்கவில்லை எனவும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு வருவதற்கு முன் ஏற்கனவே ஒப்புக்கொண்டவற்றை செயற்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி இந்திய விஜயத்தை முடித்துக்கொண்டு வந்தபின் இவ்விடயங்கள் தொடர்பில் ஆராய்வதாக கூறியதை அடுத்து இரா. சம்பந்தனும் அதனை ஒப்புக்கொண்டார் என அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’