வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 25 செப்டம்பர், 2012

மெனிக் பாம் முகாம் மூடப்பட்டமைக்கு ஐ.நா. வரவேற்பு, எனினும் இடம்பெயர்ந்தோர் குறித்து கவலை



மெனிக் பாம் முகாம் மூடப்பட்டதை தான் வரவேற்பதாக ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது. ஆயினும், இன்னும் இடம்பெயர்ந்து வாழும் மக்களையிட்டு விசனம் அடைந்துள்ளதாகவும் ஐ.நா. தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் மனிதாபிமான இணைப்பாளர் சபீனே நந்தி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "2009ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த மோதலின் போது இடம்பெயர்ந்தோருக்காக அமைக்கப்பட்டதும் ஒரு காலத்தில் உலகின் மிக பெரிய முகமாக இருந்ததுமான மெனிக் பாம் மூடப்பட்டுள்ளது. யுத்தம் முடிந்து மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலையில் இலங்கையில் இடம்பெயர்வு அத்தியாயத்தை முடிவுக்கு கொண்டுவருதல் எனும் இலக்கை நோக்கிய ஒரு வரலாற்று முக்கியத்துவம் மிக்க நிகழ்வாக இது அமைகின்றது. ஆயினும் தமது வீடுகளுக்கு திரும்ப முடியாதுள்ள மக்கள் இன்னும் உள்ளனர். இந்த பிரச்சினைக்கு அவசரமாக தீர்வு காண வேண்டிய தேவையுமுள்ளது. மெனிக் பாமிலிருந்து முல்லைத்தீவிலுள்ள கேப்பாபிளவுக்குத் திரும்பும் 110 குடும்பங்களை சேர்ந்த 346 மக்கள் பற்றி ஐக்கிய நாடுகள் விசனமடைந்துள்ளது. "இவர்களினால் தமது சொந்த வீடுகளுக்கு செல்ல முடியாது. இந்த வீடுகளில் இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளனர். இவர்களினால் அரசாங்கம், அரசுக்கு சொந்தமான வேறு காணிகளில் குடியமர்த்தி வருகின்றது. ஆனால் இடம்பெயர்ந்த மக்கள் தமது எதிர்காலத்தை தாமாகவே தீர்மானிக்க வேண்டும். அத்துடன் மீள்குடியேற்றத்தை திட்டமிட்டு முகாமைத்துவம் செய்பவர்களாகவும் அவர்கள் இருக்க வேண்டும்" என சுபினே நந்தி தெரிவித்துள்ளார். அரசாங்கத்தினால் நடத்தப்பட்ட மெனிக் பாம் முகாமானது 2009 மே மாதம் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது தப்பிவந்த ஆயிரக்கணக்கான மக்களுக்காக ஸ்தாபிக்கப்பட்டது. அதன் உச்ச கட்டத்தில் 700 ஏக்கர் பரப்பளவில் 225,000 பேர் இம்முகாமில் இருந்தனர். கூடாரங்கள், உணவு, நீர், சுகாதார வசதிகள், பாடசாலைகள், ஆரம்ப மருத்துவ வசதிகள் முதலான அடிப்படை வசதிகளை சர்வதேச அமைப்புகள் வழங்கின. "மோதலிலிருந்து நிலைத்திருக்க கூடிய சமாதானம் மற்றும் இடம்பெயர்ந்த ஆயிரக்காணக்கான மக்களை மீளக்குடியேற்ற செய்வதில் அரசாங்கத்தின் ஆழ்ந்த கவனம் என்பவற்றின் அடையாளமாக இந்த முகாம் மூடப்பட்ட நடவடிக்கை உள்ளது. வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்திலும் தமது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் அல்லது நலன்புரி நிலையங்களில் இன்னும் இடம்பெயர்ந்த நிலையில் வாழும் பலர் உள்ளனர். இவர்கள் பல ஆண்டுகளாக இடம்பெயர்ந்து வாழ்கின்றனர். இவர்களுக்கு நிரந்த தீர்வு காண ப்பட்ட வேண்டும்" என நந்தி கூறியுள்ளார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லணிக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை இலங்கை அதிகாரிகள் முழுமையாக அமுல்படுத்த வேண்டும் எனவும் சுபினே நந்தி கோரியுள்ளார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’