கி ளிநொச்சி பரந்தன் இந்து மகாவித்தியாலயத்தின் தேவைகள் கோரிக்கைகள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படும் என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ தேவானந்தா அவர்கள் தெரிவித்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
--பரந்தன் இந்து மகாவித்தியாலயத்தில் இன்றையதினம் (15) இடம்பெற்ற பெற்றோர் தினவிழாவில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இப்பாடசாலையின் பௌதீக வளம் உள்ளிட்ட கோரிக்கைகள் மற்றும் இப்பகுதிக்கான மின்சாரம், போக்குவரத்து, வீதிதிருத்தம் போன்றவை தொடர்பிலும் கல்விச் சமூகத்தினரால் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் நம்பிக்கை வீண்போகாத வகையில் உரிய தீர்வு காணும் வகையில் நிச்சயம் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
கடந்த யுத்தகாலத்தின்போது இம்மாவட்டம் முழுமையான பாதிப்பை சந்தித்திருந்ததுடன், தற்போது இங்கு பல்வேறு அபிவிருத்தி பணிகள் அரசினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறான அழிவு யுத்தத்திற்கு கடந்தகால சுயலாப அரசியல்வாதிகளே காரணம் என்று சுட்டிக்காட்டிய அமைச்சர் அவர்கள் யுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து ஏ.9 பாதை திறக்கப்பட்டதன் பின்னர் முதன்முதலாக தரைவழிப்பாதையூடாக பயணித்தபோது இப்பகுதியில் யுத்தத்தினால் ஏற்பட்ட அழிவுகளைப் பார்த்து மிகவும் கவலையடைந்தேன் என்றும் தெரிவித்தார்.
பாடசாலை மாணவர்களையும், ஆசிரியர்களையும், பெற்றோரையும் ஒன்றிணைக்கும் இதுபோன்ற நிகழ்வுகள் ஒவ்வொரு பாடசாலைகளிலும் முன்னெடுக்கப்படவேண்டிய நிகழ்வென்றும் இதன்மூலம் சிறந்ததொரு கல்விச் சமூகத்தை கட்டியெழுப்ப முடியுமென்றும் இதன்போது சுட்டிக்காட்டினார்.
பாடசாலை அதிபர் சிவநேசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பெற்றோர்களிடையே நடாத்தப்பட்ட பல்வேறு போட்டி நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் சாதித்த பெற்றோர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.
இதன்போது யாழ.; மாநக முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா, முன்னாள் அதிபர் பத்மநாதன், வலயக் கல்விப் பணிப்பாளர் முருகவேல், கிளிநொச்சி மாவட்ட ஈ.பி.டி.பி அமைப்பாளர் தவநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.
>

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’