வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 11 செப்டம்பர், 2012

'ஜெனீவா பிரேரணைக்கும் ஐ.நா மனித உரிமை பிரதிநிதிகளின் விஜயத்திற்கும் தொடர்பில்லை'


ழு மாதங்களுக்கு முன்னர், இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலக அதிகாரிகளின் விஜயத்திற்கும் எந்தவித தொடர்புமில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரேரணை நிறைவேற்றப்படுவதற்கு முன்னரே இந்த விஜயம் தீர்மானிக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டார். "ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வது தொடர்பில் கடந்த 12 மாதங்களுக்கு முன்னர் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. எனினும், குறித்த விஜயம் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளிவரும் வரை ஒத்திவைக்கப்பட்டது" எனவும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர், "எந்த நாட்டு தூதுக்குழுவும் இலங்கைக்கு வரலாம். இவ்வாறான விஜயங்களுக்கு இலங்கை அரசாங்கத்தினால் ஒரு போதும் தடைவிதிக்கப்படமாட்டாது. ஏனெனில் வெளிநாட்டு தூதுக்குழுக்களின் விஜயத்தின் ஊடாக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களை நேரில் பார்வையிட முடியும். கடந்த குறுகிய கால பகுதிக்குள் இந்தியா, ஜப்பான், பிரித்தானியா மற்றும் கனடா போன்ற நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கை விஜயம் மேற்கொண்டு நிலமைகளை நேரில் ஆராய்ந்துள்ளனர். இவ்வாறான நிலையிலேயே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலக உறுப்பினர்களின் விஜயம் அமையவுள்ளது. அவர்கள் இலங்கையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி, மீள்குடியேற்றம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான விடயங்களை பார்வையிடுவார்கள். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நடைபெறவுள்ள அனைத்துலக ஆவர்த்தன மதிப்பீடு இலங்கைக்கு மாத்திரமானதல்ல. இது அனைத்து நாடுகள் மீது மேற்கொள்ளப்படும் ஒரு ஆய்வாகும். குறித்த மாநாடு இலங்கை தொடர்பானது என பொய் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகின்றது. இந்த மாநாட்டில் அனைத்து நாடுகளும் தங்கள் நாடுகளில் மேற்கொள்ளப்படும் விடயங்கள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிப்பார். அது போன்று இலங்கையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பிலும் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அண்மையில் நடைபெற்ற மாகாண சபை தேர்தல் அரசாங்கத்திற்கு முக்கியமானதாகும். இந்த மாகாண சபை தேர்தல் வெற்றியின் மூலம் பொதுமக்கள் அரசாங்கத்துடனேயே உள்ளனர் என்ற செய்தி வெளிநாடுகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாகண சபை தேர்தலை விட இம்முறை அதிக ஆசனங்களை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கம் கைப்பற்றியுள்ளது. தேர்தல் வெற்றிகளின் மூலம் அரசாங்கம் பலப்படுத்தப்படுகின்றது. யுத்தம் நிறைவடைந்தாலும் பொருளாதார யுத்தம் இன்னும் நிறைவடையவில்லை. இதற்காக தொடர்ந்தும் உழைத்து நாட்டை கட்டியெழுப்ப வேண்டியுள்ளது என்றார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’