வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 21 செப்டம்பர், 2012

பலத்த பாதுகாப்புடன் சாஞ்சி சென்றடைந்தார் ஜனாதிபதி மஹிந்த; வைகோவும் அவரது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களும் கைது



டும் எதிர்ப்பு மற்றும் பதற்றத்துக்கு மத்தியில் பலத்த பாதுகாப்புடன் இந்திய மத்திய பிரதேச மாநிலம், போபால் நகர், சாஞ்சியை சென்றடைந்தார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. இதேவேளை, ஜனாதிபதிக்கு கருப்புக் கொடி காட்டுவதற்காக பொலிஸாரின் பாதுகாப்பையும் மீறி போபால் நகருக்குள் உட்புக முயன்ற ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ உட்பட அவரது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
சாஞ்சியில் இன்று நடைபெறவுள்ள சர்வதேச பௌத்த பல்கலைக்கழகத்துக்கான அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்துகொள்வதற்காக அப்பிரதேசத்துக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சென்றடைந்தார். இந்நிகழ்வில் ஜனாதிபதியைக் கலந்துகொள்ளவிடாது தடுப்பதற்காகவும் அவரது விஜயத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காகவும் ம.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் வைகோ தலைமையிலான ஆதரவாளர்கள் இன்று மூன்றாவது நாளாகவும் மத்திய பிரதேச மாநில எல்லை வீதியில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ம.தி.மு.க ஆதரவாளர்கள் மாநிலத்துக்குள் புகுந்துவிடுவதை தடுப்பதற்காக மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், விமானம் மூலமாகவும் ரயில்கள் மூலமாகவும் போபால் செல்ல முயன்ற ம.தி.மு.க ஆதரவாளர்கள் பலரை பொலிஸார் கைது செய்து தடுத்து வைத்துள்ளனர். இதேவேளை, ஜனாதிபதி மஹிந்தவின் விஜயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சென்னையில் பா.ஜ.க.வினரால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தை அடுத்து 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், சேலம் பகுதியில் ஜனாதிபதியில் உருவப்பொம்மையை எரித்து சட்டக்கல்லூரி மாணவர்களும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். குன்னூரில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. இருப்பினும், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சாஞ்சி சென்றடைந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அங்கு இடம்பெறும் நிகழ்வில் கலந்துகொண்டுவிட்டு சாஞ்சியில் உள்ள இலங்கை மகாபோதி சங்கத்துக்கு செல்லவுள்ளதுடன், அதன் பின்னர் போபால் திரும்பி அங்கிருந்து டெல்லி பயணமாகவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’