வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 20 செப்டம்பர், 2012

மீண்டும் முதலமைச்சராக வரமுடியாது என்பதை ஏற்கனவே விளங்கிக்கொண்டேன்: சந்திரகாந்தன்



மீண்டும் நான் முதலமைச்சராக வரமுடியாது என்பதை தேர்தல் முடிவின் மூலம் விளங்கிக் கொண்டேன்' என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போதய கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
'இந்தமுறை நான்கு முஸ்லிம் அமைச்சர்களும் ஒரு சிங்கள அமைச்சருமாக ஐந்து அமைச்சர்களும்தான் இந்த மாகாணத்தை நடத்தப் போகின்றார்கள் என்பது உண்மை. இருந்தாலும் தமிழர்களை எதிரணியில் கொண்டுசெல்ல வேண்டும் என்று வரலாற்றில் திரும்ப திரும்ப பிழைவிட்ட அரசியல் சக்திகள், குறிப்பாக சம்பந்தன் தான் இதையிட்டு கவலைப்பட வேண்டும். வெட்கப்படவேண்டும்' என்றும் அவர் குறிப்பிட்டார். நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாண சபை தேர்தல் தொடர்பாக கருத்து கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், 'கிழக்கு மாகாணத்தில் கூடுதலான விருப்பு வாக்குகளை நான் பெற்றிருக்க வேண்டும். அல்லது குறைந்தது மூன்று ஆசனங்களையாவது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியான நாங்கள் பெற்றிருக்க வேண்டும். இந்நிலையில் இம்முறை கிழக்கு மாகாண முதலமைச்சராக நான் வரமுடியாது என்பது எனக்கு தெரிந்திருந்தது. மாகாண முதலமைச்சராக இருந்து பல பணிகளை நான் செய்திருந்தேன். பின்னர் கிழக்கு மாகாண அமைச்சரவையில் ஒரு அமைச்சராக இருந்து பணி புரிவதென்பது சாத்தியமற்ற விடயமாகும். அத்தோடு அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்குவது ஆசனங்களை பிரிப்பது போன்ற சங்கடங்களை அரசாங்கம் எதிர்நோக்கியிருந்தது. இந்த கூட்டு ஆட்சிக்குள்ளே முதலமைச்சராக நாங்கள் இருந்தால் பல விடயங்களை சமாளித்து சட்ட ரீதியாக அதிகாரத்தை பயன்படுத்த முடியும். அமைச்சராக நான் இருந்து அதில் சாதித்துக்கொள்ளக் கூடிய, கட்டளை இடக்கூடிய சங்கடங்களை நாங்கள் எதிர்நோக்க வேண்டிவரும். இவற்றையெல்லாம் ஆராய்ந்த பின்னர்தான் மாகாண அமைச்சுப் பொறுப்பை பொறுப்பேற்க முடியாது என்று சொன்னேன். தொடர்ந்து கிழக்கு மாகாண அபிவிருத்தி குறிப்பாக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி போன்ற விடயங்களை பார்க்க வேண்டும் என்பதற்காக ஜனாதிபதியுடன் பேசி அங்கீகாரத்தை பெற்றுக்கொண்டேன். முந்தைய மாகாணசபை என்பது ஒரு சிறப்பான மாகாண சபையாகும். இன நல்லுறவையும் அபிவிருத்தியையும் கடந்த மாகாணசபையை ஏற்படுத்திருந்து. அதற்கு அரசியல் சூழலும் களம் அமைத்துக் கொடுத்திருந்தது. நடைபெற்று முடிந்த தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டு கிழக்கு மாகாணத்தின் அமைதி, நிருவாகம் எல்லாவற்றையுமே குழப்பி விட்டிருக்கின்றது. இந்த முறை நான்கு முஸ்லிம் அமைச்சர்களும் ஒரு சிங்கள அமைச்சருமாக ஐந்து அமைச்சர்களும்தான் இந்த மாகாணத்தை நடத்தப் போகின்றார்கள் என்பது உண்மை. இருந்தாலும் தமிழர்களை எதிரணியில் கொண்டுசெல்ல வேண்டும் என்று வரலாற்றில் திரும்ப திரும்ப பிழை விட்ட அரசியல் சக்திகள் குறிப்பாக சம்பந்தன் அவர்கள் தான் இதையிட்டு கவலைப்பட வேண்டும். வெட்கப்படவேண்டும். அவர்தான் கிழக்கு மாகாண தமிழர்களை நடு ஆற்றில் விட்டிருக்கின்றார் என்பதுதான் அரசியல் ரீதியான உண்மை. நான் மாகாணசபை உறுப்பினராக இருப்பேன். எனது ஆசனம் மாகாணத்துக்கு முக்கியமானது. அதே நேரம் நான் செய்து கொண்டிருந்த அபிவிருத்திகளை இடைநடுவில் விட்டு விட்டு செல்லமுடியாது. அவற்றையெல்லாம் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும.; என்னை நம்பி வாக்களித்த 25000க்கும் அதிகமான மக்களின் நலன்கள், அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக உழைக்க வேண்டும். அத்தோடு எங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நிருவாக ரீதியான பிரச்சினைகளையெல்லாம் கருத்திற்கொண்டுதான் அதன் நிமித்தம் ஜனாதிபதியின் ஆலோசகர் எனும் பதவியைக்கூட நான் ஏற்றுக் கொண்டேன். அதைக்கூட எடுப்பதற்கு தனிப்பட்ட ரீதியான விருப்பமொன்று எனக்கு இருக்கவில்லை. நான் தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக செல்வதற்கு எந்த விதமான கோரிக்கையும் விடவில்லை. மக்களோடு என்றும் நாங்கள் நிற்போம். கிழக்கின் அபிவிருத்தியில் கரிசணையுடன் செயலாற்றுவோம்' என அவர் மேலும் தெரிவித்தார். -->

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’