செ ப்டெம்பர் மாதம் 8ஆம் திகதி இராணுவ மேஜரொருவரை தாக்கி, அவரது கைத்துப்பாக்கியை பறித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை அமைச்சர் மேர்வின் சில்வாவின் புதல்வர் மாலக்க சில்வா மறுத்துள்ளார்
. 'நைட் கிளப்பில் ஏற்பட்ட குழப்பத்தின்போது யாரோ சிலர் இராணுவ மேஜரை தாக்கினர். அத்தருணத்தில் அவரது கைத்துப்பாக்கி கீழே விழுந்துள்ளது. எனது வாகன சாரதி இக்கைத்துப்பாக்கியை எடுத்து பொலிஸில் ஒப்படைத்தார்' என அவர் கூறினார். அன்றையதினம் கொழும்பிலுள்ள ஹில்டன் வீட்டுத்தொகுதியில் தனது நண்பர்களுடன் தேர்தல் முடிவுகளை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்ததாகவும் அவர் கூறினார். 'நான் தேர்தல் முடிவுகளை தொலைக்காட்சியில் பார்த்த பின்னர் வீட்டிற்குப் போக தயாரானபோது 2 பேரை அவதானித்தேன். இவர்களில் ஒருவரை வெளிநாட்டுப் பயணங்களின்போது பல தடவைகள் நான் சந்தித்துள்ளேன். நாவல நிஹால் என்னும் இவர் 'பொடி சூட்டி' என அழைக்கப்படுபவராவார். நான் அவருக்கு ஹலோ சொன்னேன். பின் வந்த மற்றைய நபர் இவன் யாரென அவர்களிடம் கேட்டார். என்னைப் பற்றி அவன், இவனெனப் பேசுவதற்கு நீ யாரென நான் கேட்டேன்' என அவர் கூறினார். இவ்வாறான வாய்த்தர்க்கத்தை விட வேறு சம்பவங்கள் இடம்பெறவில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார். -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’