ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய விஜயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பொராட்டம் நடத்துவதற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் இந்திய மத்திய பிரதேச மாநிலத்துக்கு சென்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மத்திய பிரதேச எல்லையில் வைத்தே பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சியில் நிர்மாணிக்கப்படவுள்ள சர்வதேச பௌத்த பல்கலைக்கழகத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது. இதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்ளவுள்ளார். இந்நிலையில், ஜனாதிபதியின் இந்திய விஜயத்துக்கு திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் அமைப்புக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சேலத்தில் விஜயராஜ் என்ற முச்சக்கரவண்டி சாரதியொருவர் தீக்குளித்து உயிரிழந்தார். இருப்பினும் ஜனாதிபதியின் இந்திய விஜயத்தை ரத்து செய்ய முடியாது என இந்திய மத்திய மத்திய அரசும், மத்திய பிரதேச மாநில அரசும் அறிவித்துள்ளது. இதனையடுத்தே ஜனாதிபதிக்கு கருப்புக் கொடி காட்டும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தார் வைகோ. மேலும் தனது தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் ஏராளமான பஸ்களில் சாஞ்சிக்கு பயணித்தார். இன்று வைகோ உள்ளிட்டோர் மத்தியப் பிரதேச மாநில எல்லையை அடைந்துள்ளனர். அங்கு மகாராஷ்டிரா - மத்தியரப் பிரதேச எல்லையில் உள்ள சிந்த்வாரா மாவட்டத்தில் உள்ள பந்துர்னா என்ற ஊரை அவர்கள் அடைந்தபோது போலிஸார் அனைவரையும் தடுத்து நிறுத்தியுள்ளனர். -->
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’