வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 1 ஆகஸ்ட், 2012

மக்கள் போராட்டம் ஒன்றே மஹிந்தவை வீட்டுக்கு அனுப்பும் ஆயுதம்: சோமவன்ச


ஹிந்த அரசாங்கத்திற்கு எதிராக நாட்டு மக்கள் அனைவரும் வீதிக்கு வந்து போராடும் காலம் வந்தவிட்டது. தற்போது நாட்டில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த மக்கள் போராட்டம் ஒன்றே மஹிந்தவை வீட்டுக்கு அனுப்பும் ஆயுதம் என்பதை மக்கள் விடுதலை முன்னணி உணர்ந்துள்ளது. இந்தப் போராட்டங்கள் மஹிந்த அரசின் விழ்ச்சிக்கான அறிகுறி என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார்.
இன்று புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 'மக்களை வதைக்கும் ஆட்சிக்கெதிராக அணி திரள்வோம்' என்னும் கருப்பொருளில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனை அவர் தெரிவித்தார். போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு மூன்று வருடங்கள் கழிந்த விட்டன. போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் இன்னும் கட்டி எழுப்பப்படவில்லை. இந்த நிலையில் பல்வேறு நாடுகளில் இன்றும் இலங்கை அரசாங்கம் கடன்களைப் பெற்று வருகின்றது. கடன்களைப் பெற்று ஆட்சி நடத்தும் அரசாங்கமாக இந்த அரசாங்கம் மாறிவிட்டது. 2005 தொடக்கம் 2010 வரையான காலப்பகுதியில் 44 ஆயிரம் கோடி இலங்கை அரசாங்கத்தினால் கடன்பெறப்பட்டுள்ளது. இந்த கடன் தொகை மூலம் பிறக்கும் பிள்ளைகள் கூட 3 லட்சம் ரூபாய் கடன்காரர்களாக பிறக்கவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த அரசாங்கத்தின் செயற்பாடு காரணமாக மக்கள் வீதியில் இறங்கிப் போராடத் தொடங்கிவிட்டனர். இஸட் புள்ளி விவகாரத்தால் இரண்டு லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாணவர்களும் போராடத் தொடங்கியுள்ளனர். மாணவர்கள் தொடக்கம் பல்கலைக்கழக உத்தியோகஸ்தர்கள், நீதியாளர்கள் எனப் பலரும் களத்தில் குதித்துள்ளனர். இவ்வாறான மக்கள் போரட்டத்தின் மூலம் பல வெற்றிகளும் கிடைத்துள்ளன. இந்த மக்கள் எழுச்சிதான் மஹிந்த அரசின் வீழ்ச்சியின் அறிகுறியாக அமைந்துள்ளது. மஹிந்த அரசாங்கத்திற்கு எதிராக போராடுவதற்கு யாரும் முன்வந்தால் அதனை தலை ஏற்று நடத்துவதற்கு மக்கள் விடுதலை முன்னணி எப்பொழுதும் தயாராகவே இருக்கிறது. எங்களின் இந்தப் போராட்டத்தை தடை செய்வதற்கு அரசு பல்வேறு வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டது. நீதிமன்றத்தின் மூலம் தடை போடுவதற்கு நடவடிக்கை எடுத்தது. இன்று இந்த யாழ். மண்ணில் எங்கள் போராட்டம் நடைபெறுவதற்கு பொலிஸாரும் இராணுவத்தினரும் பல்வேறு உதவிகளை வழங்கியிருக்கின்றார்கள். இவர்களும் இந்த அரசாங்கத்தின் செயற்பாட்டை உணர்ந்துகொள்ளத் தொடங்கிவிட்டார்கள் என்று யாழில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க மேலும் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’