வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

எம்மீதான சேறுபூசல்கள் மீண்டும் ஆரம்பித்து விட்டன: சந்திரகாந்தன்



தேர்தல் அறிவிக்கப்பட்ட தினத்திலிருந்து எம்மீதான சேறுபூசல்கள் மீண்டும் ஆரம்பித்து விட்டன என முதலமைச்சர் வேட்பாளர் சந்திரகாந்தன் தெரிவித்தார். தேற்றாத்தீவுக் கிராமத்தில் இடம் பெற்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் முதலமைச்சர் வேட்பாளர் சந்திரகாந்தன் கலந்துகொண்டு உரையாற்றும் மேற்கண்டவாறு தெரிவித்தார் அங்கு அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
வரலாற்றில் ஒருபோதும் இல்லாத ஒற்றுமைவேசம் போட்டுக் கொள்ளும் தமிழ்த் தலைமைகள் அனைத்தும் எனது மண்ணுக்கு வந்து என்னை வீழ்த்த எனது மக்களிடமே ஆணைகோரும் இறுமாப்பினை முறியடித்து முன்னேறுவேன். 1977ஆம் ஆண்டு சொல்லின் செல்வர் இராஜதுரைக்கு எதிரானசதியில் எப்படி வீட்டுச் சின்னம் முன்னிறுத்தப்பட்டதோ அதேபோன்று இம்முறையும் வீட்டுச் சின்னம் சதியின் சின்னமாக வந்திருக்கின்றது. முதலாவது கிழக்குமாகாணசபை உருவாகிய போது எங்களைத் துரோகி என்றவர்கள் நாங்கள் உருவாக்கிய மாகாணசபையில் வந்து துளியளவும் வெட்கமின்றி பங்கு கேட்டு நிற்கின்றனர். ஒவ்வொரு வரலாற்று நிகழ்வுகளிலும் இடம் பெறுவது போல அனைத்து ஊடகங்களும் யாழ். மேலாதிக்கத்துக்கு துதிபாடி,சாமரம் வீசி நிற்கின்றன என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’