வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 18 ஆகஸ்ட், 2012

தமிழகத்தில் மனிதக் கடத்தல் குழுவினரிடமிருந்து 30 இலங்கையர்கள் மீட்பு


டகுமூலம் அவுஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்லப்படவிருந்த 30 இலங்கையர்களை தமிழ்நாட்டின் கியூ பிரிவு பொலிஸார் வியாழனன்று மீட்டுள்ளனர்.
வண்டலூர் நகரில் குழுவொன்றிடமிருந்து இவர்கள் மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரகசிய தகவல் ஒன்றையடுத்து, இலங்கைத் தமிழர்களை ஏற்றிச்சென்ற வாகனமென்றை பொலிஸார் மறித்து சோதனையிட்டனர். எனினும் இம்மனிதக் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த குழுவினர் தப்பியோடிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மேற்படி இலங்கையர்கள் கிறிஸ்மஸ்தீவுக்குச் செல்லும் படகொன்றில் இவர்கள் ஏற்றப்படவிருந்தாக ஆரம்ப விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. இவர்கள் 50,000 முதல் ஒரு லட்சம் வரையிலான இந்திய ரூபா பணத்தை மேற்படி குழுவினருக்கு வழங்கியுள்ளனர். தற்போது மேற்படி இலங்கையர்களை தமிழகத்தின் பல்வேறு பாகங்களிலுள்ள அவர்களின் முகாம்களுக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஒருவார காலத்தில் தமிழகத்தில் இடம்பெற்ற இரண்டாவது சம்பவம் இதுவாகும். சில தினங்களுக்கு முன்னர் மனிதக் கடத்தல் தொடர்பாக 5 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்ததுடன் 23 இலங்கையர்களை மீட்டமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’