சிரியாவுக்கு எதிரான தடைகளை ரஷ்யாவும் சீனாவும் தடுத்தால் அந்நாடுகள் அதற்கான விலையை செலுத்துவதை எதிர்பார்க்க வேண்டியிருக்கும் என அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன் தெரிவித்துள்ளார்.
பாரிஸில் நடைபெறும் 'சிரியாவின் நண்பர்கள்' எனும் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். சிரிய ஜனாதிபதி பஷார் அல் அஸாட்டின் அரசாங்கத்திற்கான ஆதரவை நிறுத்துமாறும் ரஷ்யாவையும் சீனாவையும் ஹிலாரி கினின்டன் வலியுறுத்தியுள்ளார். சுமார் 60 நாடுகள் இம்மாநாட்டில் பங்குபற்றுகின்றன. எனினும் ரஷ்யாவும் சீனாவும் இதில் பங்குபற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’