வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 10 ஜூலை, 2012

பாலியல் குற்றம் புரிவோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும்: விமல் வீரவன்ச



ந்த நாட்டில் நாளுக்கு நாள் குற்றச் செயல்கள் அதிகரித்துச் கொண்டே செல்கின்றன. இக்குற்றச் செயல்களில் சிறுவர்களை பாலியலுக்கு ஈடுபடுவோருக்கு ஆகக்கூடிய தண்டனையாக மரண தண்டனையாவது விதிக்க வேண்டும்' என்று வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
இந்த நாட்டில் உள்ள குற்றம் சம்பந்தமான தண்டனைகள் மற்றும் நீதி, சட்டம் ஓழுங்குகளை மறுசீரமைத்து இந்த நாட்டில் உடனடியாக அமுல்படுத்துவதற்கு அரசாங்கமும் நீதி அமைச்சும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுவர் துஷ்பிரயோகம், பாலியல் குற்றச்செயல்கள், போதைவஸ்து போன்ற குற்றங்களுக்கு அரபு நாடுகளில் அமுலாக்கும் இஸ்லாமிய சரியா சட்டம் போன்றதற்கு சமமானதொரு சட்டமே இலங்கைக்கும் மிகவும் அவசியமாகும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். கிராண்பாஸில் உள்ள வீடமைப்புத் திட்டத்தில் புதிதாக சமுக சேவைகள் மண்டபமொன்றை திறந்து வைத்து உரையாற்றும்போதே அமைச்சர் விமல் வீரவன்ச மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர், 'குற்றச்செயலில் ஈடுபடுவோரை சிறைச்சாலைக்கு அனுப்பி வைப்பது ஒரு சுற்றுப்பிரயாணம்போல் ஆகிவிட்டது. குற்றவாளிகள் வீடுகளில் இருப்பதனை விட தற்பொழுது சிறைச்சாலைகளில் கூட அங்கு அவர்கள் சுகபோக வாழ்க்கையே அனுபவிக்கின்றனர். அவர்களுக்கு கையடக்கத் தொலைபேசி வசதிகள், குடிவகைகள், போதைவஸ்து, பழமும் பாழும் கொண்டுசென்று உறவினர்கள் சந்திக்கின்றனர். இதனை அவர் ஒரு சுற்றுப்பிரயாணம் போன்று அனுபவித்து வெளியில் வந்தவுடன் மீண்டும் அவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் ஒருபோதும் இந்த நாட்டில் குற்றச்செயல்கள் குறையப்போவதில்லை. அரபு நாடுகளில் அமுலாக்கும் சரியா சட்டம் இலங்கைக்கும் மிகவும் அவசியமாகும். இவ்வாறு இலங்கையிலும் அமுல்படுத்தினால் தான் குற்றச்செயல்கள் குறைவதற்கு இடமுண்டு. ஒரு நாளைக்கு சராசரியாக 6 சிறுமிகள் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படுத்தப்படுகின்றனர். இது தொடர்பில் நாளாந்த பத்திரிகைகளின் மூலம் அறியக்கூடியதாக உள்ளது. பத்திரிகைகளுக்கு வராமல் எத்தனையோ துஸ்பிரயோகங்கள் நிகழக்கூடும்' என அமைச்சர் குறிப்பிட்டார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’