ம க்களால் தெரிவு செய்யப்படும் ஒரு தலைவரால் மட்டுமே மக்களுக்கான சேவையைச் சிறப்பாக செய்ய முடியும் என்பதுடன், அவ்வாறான சேவையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சிறப்புடன் மேற்கொண்டு வருகின்றார் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாட்டு மற்றும் நலன்புரி அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
யாழ்.மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற யாழ்.மாவட்டத்திற்கான புலம்பெயர் தொழிலாளர்களின் அமைப்பை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மக்களின் தலைவர் மட்டுமல்ல மக்களால் தெரிவு செய்யப்பட்ட சிறந்த தலைவராகவும் விளங்கி வருகின்றார். அவ்வாறு மக்களால் தெரிவு செய்யப்படும் ஒரு தலைவரால் மட்டுமே மக்களுக்கான பல்வேறு விதமான சேவைகளைச் சிறப்பாக முன்னெடுக்க முடியும் என்பதுடன், அவ்வாறான சேவையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அக்கறையோடு மேற்கொண்டு வருகின்றார் என சுட்டிக்காட்டினார்.
இதனிடையே வெளிநாடுகளில் தொழில்புரியும் நம் நாட்டவர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கும், அவர்களது குடும்பநலன்களைக் கருத்தில் கொண்டும் வெளிவள வீரர்கள் (ரட்டவிருவோ) என்ற அமைப்பு நாடளாவிய ரீதியில் பிரதேச மற்றும் மாவட்ட ரீதியாக அமைக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் இவ்வமைப்பு யாழ்.மாவட்டத்தில் இன்றைய தினம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் வெளிநாடுகளில் தொழில் புரிவோர் மட்டுமல்லாது அவர்கள் சார்ந்த குடும்பங்களினது வாழ்க்கையையும் பாதுகாக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கருத்துத் தெரிவிக்கும் போது ஒரு காலகட்டத்தில் உழைப்பிற்காகவும், பாதுகாப்பிற்காகவும் இம்மாவட்டத்திலிருந்தும் வெளிநாட்டுக்கு பலர் சென்றிருந்த நிலையில், இன்று அந்த நிலைமாறியுள்ளதாகவும், எதிர்காலத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நலன்புரி அமைச்சுடன் இணைந்து நாமும் வெளிநாடுகளில் தொழில் புரிவோரின் நலன்கள் விடயங்களுக்காக ஒன்றிணைந்து உழைப்போம் என்றும் தெரிவித்தார்.
மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மேலதிக அரச அதிபர் திருமதி ரூபினி வரதலிங்கம், வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் நலன்புரி அமைச்சின் பிரதி முகாமையாளர் மங்கள தெண்தெனிய, ஆலோசகர் அகமட் உள்ளிட்ட துறைசார்ந்த பலரும் உடனிருந்தனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’