வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 23 ஜூலை, 2012


ந்திய ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளரான பிரணாப் முகர்ஜி வெற்றி பெற்றுளார். இந்தியாவின் 13ஆவது ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள பிரணாப் முகர்ஜி வெற்றி பெறுவதற்கு தேவையான 5,58,000 வாக்குகளுக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுக்கொண்டார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பி.ஏ.சங்மா சுமார் 2 இலட்சம் வாக்குகளைப் பெற்றுக்கொண்டார். கடந்த 19ஆம் திகதி நடைபெற்ற இந்திய ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜியும் எதிர்க்கட்சிகளின் சார்பில் பி.ஏ.சங்மாவும் போட்டியிட்டனர். இவ்வாக்குப்பதிவின்போது மொத்தமக்க 8 இலட்சம் வாக்குகள் பதிவாகின. வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற்றது. பிரணாப் முகர்ஜியின் வெற்றியை நாடு முழுவதிலும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கட்சிகள் கொண்டாடிய அதேவேளை, தேர்தலில் வெற்றி பெற்ற பிரணாப் முகர்ஜிக்கு பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள் நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்தனர். தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி சார்பில் டி.ஆர்.பாலு வாழ்த்து தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’