வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 17 ஜூலை, 2012

சார்க் நாடுகளுடனான ஒப்பந்தப்படியே இலங்கை இராணுவத்துக்கு இந்தியா பயிற்சி: ஞானதேசிகள்



சா'ர்க் நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தங்களின் அடிப்படையில் அந்நாடுகள் பல பரிவர்த்தனைகளைச் செய்து வருகின்றன. அந்த ஒப்பந்தத்தின்படியே தான் இந்தியா இலங்கை இராணுவத்தினருக்கு பயிற்சி அளிக்க சம்மதித்தது' என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் விளக்கமளித்துள்ளார்.
இதேவேளை, 'இலங்கை இராணுவத்துக்கு பயிற்சியளிப்பதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து, ஒப்பந்தத்தை மீறக்கூடாது என்ற எண்ணத்தில் இலங்கை இராணவத்தினருக்கு பெங்களூரில் பயிற்சி அளிக்க இந்திய மத்திய அரசு ஏற்பாடு செய்யதது' என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், 'டெசோ மாநாடு குறித்து நான் எதுவும் தெரிவிக்கவில்லை. இலங்கையில் வாழும் தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும், வளப்படுத்தப்பட வேண்டும் என்ற காங்கிரஸின் கருத்தையே நானும் தெரிவித்தேன். இது குறித்த திமுக தலைவர் கருணாநிதியின் கருத்துகள் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்புடையதாக உள்ளன. அவை வரவேற்கத்தக்கவை. இலங்கையில் வாழும் தமிழர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அனைவரும் ஒன்றுபட்டால் அதில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி' என்று ஞானதேசிகன் மேலும் கூறியுள்ளார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’