வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 22 ஜூன், 2012

துருக்கிய யுத்த விமானத்தை சிரியா சுட்டுவீழ்த்தியது



து ருக்கிய யுத்த விமானமொன்றை சிரியா சுட்வீழ்த்தியாக அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்-4 ரக யுத்த விமானமொன்றை சுட்டுவீழ்த்தியமக்காக சிரியா மன்னிப்பு கோரியுள்ளது என துருக்கியின் பிரதமர் தாயீப் எர்டோகன் இன்று கூறினார்.
இவ்விமானத்தின் விமானிகள் இருவரும் உயிருடன் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 'எமது விமானப்படையும் கடற்படையும் மத்திய தரைக்கடல் பகுதியில் தேடுதல் நடத்துகின்றன. அதிஷ்டவசமாக எமது விமானிகள் உயிருடன் உள்ளனர். நாம் விமானமொன்றை மாத்திரமே இழந்துள்ளோம்' என பிரேஸிலில் இருந்து திருப்பியபின் தலைநகர் அங்காராவில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் அவர் தெரிவித்தார். முத்திய தரைக்கடல் பகுதியில் சிரியாவுக்கு அருகில் வைத்து தனது விமானமொன்றை ராடர் திரையிலிருந்து மறைந்ததாக துருக்கி முன்னர் அறிவித்திருந்தது. எனினும் இவ்விமானத்தை சிரிய படையினர் சுட்டுவீழ்த்தியதாக லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புக்கு சொந்தமான தொலைக்காட்சியான அல் மனார், சிரிய பாதுகாப்பு அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டிருந்தது. இதேவேளை இவ்விடயம் தொடர்பாக ஆராய்வதற்கு துருக்கிய அரசாங்கம் அவசர பாதுகாப்பு மாநாடொன்றை நடத்துகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’