வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 20 ஜூன், 2012

நாடு கடத்துவதற்கு யூ.என்.எச்.சீ.ஆர். எதிர்ப்பு


லங்கையில் வசிக்கும் பதிவு செய்யப்பட்ட அகதிகள்; மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களை இலங்கை நாடு கடத்துமானால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுமென ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
14 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டுமெனவும் அல்லாவிடின் நாடு கடத்தும் நடவடிக்கைக்கு முகம் கொடுக்க நேரிடுமெனவும் கூறி குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் தங்களுக்கு கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக நாட்டில் பதிவுகளை மேற்கொண்ட அகதிகளில் பலர் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் உறவு அதிகாரி சுலக்ஷனி பெரேரா கூறினார். விசா முடிவடைந்தமையே அண்மைய நாடு கடத்தலுக்கான காரணமென அக்கடிதங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அகதிகள் மற்றும் புகலிடம் கோருவோரை திருப்பியனுப்புவது உயிருக்கு அல்லது சுதந்திரத்துக்கு ஆபத்துள்ள இடங்களுக்கு புகலிடம் கோருவோரை திருப்பியனுப்புவதை தடைசெய்யும் சர்வதேச சட்டத்திற்கு முரணானதாக அமையுமெனவும் அவர் கூறினார். இவ்வாறு நாடு கடத்துவது ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் அராங்கத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தையும் வெளிவிவகார அமைச்சுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தையும் மீறுவதாகும். இந்த ஒப்பந்தங்களின் காரணமாகத்தான் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிராலயத்தால் இலங்கையில் மனிதாபிமான உதவித் திட்டங்களை அமுல்படுத்தவும் புகலிடம் கோருவோர் மற்றும் அகதிகளுக்கு சான்றிதழ் வழங்கவும் முடிகின்றதென ஒரு உயர்ஸ்தானிகர் அதிகாரி கூறினார். நாடு கடத்தல் அறிவித்தலை இரத்துச் செய்து அடைக்கலம் கோருவோரை திருப்பியனுப்புவதை நிறுத்துவதற்காக உரிய அதிகாரபீடங்களுடன் பேசவுள்ளதாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் கூறியுள்ளது. இது தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டு அதிகாரி சூளானந்த பெரேரா கருத்துக் கூற மறுத்துவிட்டார். இவ்விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிவதற்காக வெளிவிவகார அமைச்சுடன் தொடர்புகொள்ள மேற்கொண்டு முயற்சி பலனளிக்கவில்லை. (

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’