வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 28 ஜூன், 2012

வடமாகாண தேர்தலை தற்போது நடத்துவதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன: அரசாங்கம்


டக்கில் நிலவிய யுத்த சூழ்நிலை தற்போது முற்றாக நீக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சில நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக வடமாகாணத் தேர்தலை தற்போதைக்கு நடத்த முடியாது என அரசாங்கம் இன்று அறிவித்தது.
இருப்பினும் வடக்கில் தேர்தலை நடத்துவதற்கான உரிய காலம் வந்தவுடன் அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமாக கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று வியாழக்கிழமை தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டின் போது, 'வடமத்தி, கிழக்கு மற்றும் சப்ரகமுகா மாகாணசபைத் தேர்தல்களை நடத்த தீர்மானித்துள்ள அரசாங்கம், இன்னமும் வடமாகாணத் தேர்தலை நடத்துவதில் ஆர்வம் காட்டவில்லையே' என்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர், 'வடமாகாணத் தேர்தலுக்கான வாக்காளர் நிரலைத் தயாரிப்பதென்பது ஓரிரு வாரங்களில் செய்யக்கூடிய வியமல்ல. இதற்கும் மேலாக, வடக்கில் புதைக்கப்பட்டுள்ள நிலக்கண்ணிவெடிகள் முற்றாக அகற்றப்படவில்லை. 90 வீதமான கண்ணிவெடிகளே அகற்றப்பட்டுள்ளன. அவை முற்றாக அகற்றப்பட்டு வடக்கில் முழுமையான சிவில் நிர்வாகம் முன்னெடுக்கப்பட வேண்டும். வடக்கில் தற்போதைக்கு 95 வீதமானளவில் மாத்திரமே சிவில் நிர்வாகம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஏனைய 5 வீதமானோருக்கு அசாதாரணத்தை ஏற்படுத்த முடியாது. இவ்வாறான சில நடைமுறைச் சிக்கல்கள் காரணமாகவே வடக்கில் தேர்தலை தற்போதைக்கு சாத்தியப்படாது என்று கூறுகின்றோம். வெகு விரைவில், வடக்கில் சிறந்தவொரு ஜனநாயக நீரோட்டத்தை ஏற்படுத்துவதற்காக தேர்தல் நடத்தப்படும்' என்று அமைச்சர் மேலும் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’