வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 8 ஜூன், 2012

ஜனாதிபதியின் பிரித்தானிய விஜயம் வெற்றிகரமாக அமைந்துள்ளது: பீரிஸ்



னாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரித்தானிய விஜயம் வெற்றிகரமாக அமைந்துள்ளது என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சமூகத்தில் பிழையான தகவல்களை வெளியிடும் தரப்பினருக்கு ஜனாதிபதியின் பிரித்தானிய விஜயம் சிறந்த பதிலடியாக அமைந்தது என அவர் சுடடிக்காட்டியுள்ளார். இலங்கை தொடர்பான சரியான நிலைப்பாட்டை வெளிப்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார். பிரித்தானியாவின் பல உயரதிகாரிகளை ஜனாதிபதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிவித்துள்ளார். நாட்டின் நிலைமகள் குறித்து பிரித்தானிய அதிகாரிகள், ஜனாதிபதியிடம் திருப்தி வெளியிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார் . ஜனாதிபதியின் பிரித்தானிய விஜயம் நடைமுறைச் சாத்தியமான வெற்றியளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். பிரித்தானிய மகாராணி எலிசபத்தை ஜனாதிபதி மூன்று தடவைகள் சந்தித்ததாக வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பேச்சுவார்த்தை நடத்தியதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். பிரித்தானிய எதிர்க்கட்சித் தலைவர் எட் மில்லிபாண்ட்டையும் ஜனாதிபதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக குறிப்பிட்டுள்ளார். இந்த சந்திப்புக்களின் போது பிரித்தானிய மக்களிடையே இலங்கை தொடர்பான நன்மதிப்பை மேம்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக சில தரப்பினர் இலங்கை தொடர்பில் பிழையான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகவும், இந்தப் பிரச்சாரங்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சிறந்த பதிலை வழங்கியுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’