மிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவினை அரசு பெற்றிருந்தால் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலை மாறியிருக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
எமது மக்களுக்கு எங்களை தெரியும். எங்களுக்கு எமது மக்களை தெரியும். அத்துடன் எமது மக்கள் பெறும் துன்ப, துயரங்கள் மற்றும் கஷ்டங்களும் எங்களுக்கு தெரியும். இதனால், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உதவியுடன் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு இலகுவாக தீர்வு கண்டிருக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். எதிர்க்கட்சிகளின் கூட்டணியின் தேசிய மே தின கூட்டம் யாழ். குருநகர் சென்றோக்ஸ் மைதானத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றி அவர், "தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவினை அரசு பெற்றிருந்தால் வெளிநாட்டு அரசுகள், வெளிநாட்;டு நிறுவனங்கள் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் உதவியிருப்பர். இதன் மூலம் முறையான திட்டங்களை வகுத்து அரசாங்கத்துடன் இணைந்து தமிழ் மக்களின் பிரச்சினை தீர்வு கண்டிருக்க முடியும். தமிழ் மக்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு வழங்கப்பட்டு தமிழ் மக்களின் தும்ப துயரங்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும். குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக அரசு செயற்பட்டு தமிழ் மக்களின் துன்பங்கள் பற்றி அக்கறையற்றுள்ளது. இந்த நிலை மாற வேண்டும். இனங்கள் ஒருமித்து ஒற்றுமையாக வாழ்வதற்கு இலங்கையில் இடமுண்டு. இதற்கு தீர்வொன்று முக்கியமானதாகும். சில அரசியல்வாதிகள் மக்களைப் பிரித்து வைத்து அரசியல் மேற்கொள்கின்றனர். தாங்கள் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதற்காகவே இவ்விதம் செய்கின்றார்கள். எனினும் வடக்கு மற்றும் தெற்கு மக்களிடையேயான ஒற்றுமையை வெளிக்காட்டுவதற்கு இந்த மே தினம் சிறந்த நிகழ்வாகும். இவ்விதமான தீயசிந்தனைக்கு இடம் கொடுக்காமல் நாங்கள் நடந்து கொள்ள வேண்டும். யுத்தம் முடிந்த பின்னரும் மக்களின் உடனடித் தேவைகள் இன்னும் பூர்ததி செய்யப்படவில்லை தேசிய பிரச்சனைக்கு ஒரு முன்வைப்பதற்காக அரசிற்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்க தயாராக இருக்கின்றோம். இதற்காக கடந்த ஒரு வருடம் அரசுடன் பேச்சு நடத்தினாமேம். ஆனால் அது பயனளிக்கவில்லை. ஒருமித்த இலங்கைக்குள் பிரிவினை ஏற்படாமல் நீதியான அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதே எங்களது விருப்பமாகும். ஆனால் குறுகிய நோக்கங்களுக்காக அரசு எமது உதவியினை பெறாமையினாலேயே எமது மக்கள் இன்று துன்பங்களை அனுபவிக்கின்றனர். இனப்பிரச்சினைக்கு நிரந்த தீர்வு காண்பதற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் பூரண ஒத்துழைப்பை வழங்க தயாராகவுள்ளன. சில அரசியல்வாதிகள் மக்களைப் பிரித்து வைத்து அரசியல் பிழைப்பு நடத்துகிறார்கள். தாங்கள் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதற்காகவே இவ்விதம் செய்கின்றார்கள் இவ்விதமான தீயசிந்தனைக்கு இடம் கொடுக்காமல் நாங்கள் நடந்து கொள்ள வேண்டும். யுத்தம் முடிந்த பின்னரும் மக்களின் உடனடித் தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை. தேசியப்பிரச்சனைக்கு ஒரு தீர்வை முன்வைப்பதற்காக அரசிற்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்க தயாராக இருக்கின்றோம். ஒருமித்த இலங்கைக்குள் பிரிவினை ஏற்படாமல் நீதியான நியாயமான அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதே எங்களது விருப்பம். நாங்கள் அரசுடன் பேசியிருக்கின்றோம் எந்த விடயத்திலும் முன்னேற்றம் ஏற்படவில்லை. தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வை முன்வைத்தால் புலம் பெயர் மக்களின் உதவிகளும் அதிகரிக்கும்" என்றார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’