வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 31 மே, 2012

யாழ். மக்கள் இலங்கைக்குள் ஒளிமயமான எதிர்காலத்துடன் வாழ்கின்றனர்: சிங்கப்பூர் அமைச்சர்



யாழ். மக்கள் இலங்கைக்குள் ஒளிமயமான எதிர்காலத்துடன் வாழ்கின்றனர் என யாழ்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கே.சண்முகம் தெரிவித்தார்
யாழ். நூலகத்தை பார்வையிட்ட பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர், ' கடந்த 30 வருட காலம் யாழ்ப்பாணத்தில் என்ன நடந்தது என்பதை சிங்கப்பூர் பத்திரிகை ஊடாகவே அறிந்தேன். ஆனால், இன்று நேரில் யாழ்ப்பாணத்தை பார்வையிடுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. யாழ். நூலகத்தின் சிறுவர் பகுதியில் கணணி இணைப்புக்களை ஏற்படுத்துவதற்கு சிங்கப்பூர் அரசு நடவடிக்கை எடுக்கவுள்ளது. சிறுவர்களின் கணணி அறிவை வளர்ப்பதற்கு அதற்குரிய ஆசிரியர்களை பயிற்றுவிப்பதற்கு நாங்கள் நடவடிக்கை எடுக்கவுள்ளோம் நான் யாழ்ப்பாணத்திற்கு முதல் முறையாக எனது மனைவி சீதாவுடன் வந்துள்ளேன். நல்லூர் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டுள்ளதுடன் யாழ்.நூலகத்தில் அரிய நூலக்களையும் பார்வையிட்டுள்ளேன்' என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’