வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 28 மே, 2012

நவ நீதம் பிள்ளையையோ குழுவினரையோ இலங்கைக்குள் அனுமதிக்க வேண்டாம்: ஜனாதிபதிக்கு தே.தே.இ.கடிதம் _



வ நீதம் பிள்ளையையோ அல்லது அவரது நிபுணர் குழுவினரையோ இலங்கையில் காலடி எடுத்து வைக்க இடமளிக்க வேண்டாம் என தெரிவித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் அவசரக் கடிதமொன்றை நேற்று ஞாயிற்றுக் கிழமை அனுப்பி வைத்துள்ளது.
இவர்களை நாட்டுக்குள் வருவதற்கு இடமளிப்பதானது ஜெனிவாவில் முன் வைக்கப்பட்ட எமக்கெதிரான பிரேரணையை ஏற்றுக் கொள்வதாக அமைந்துவிடுமென்றும் அக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக முன் வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைய விசேட செயற் திட்டத்தை உருவாக்குவதற்கான அதிகாரமுள்ள குழுவே இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது என்ற தலையங்கத்தில் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் டாக்டர் குணதாச அமர சேகரவினால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அவசரக் கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : ஐ. நா. மனித உரிமை ஆணைக் குழுவினர் வெளிநாட்டமைச்சுக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இக் கடிதத்தை அனுப்பி வைத்துள்ள மனித உரிமை ஆணையாளர் நவ நீதம் பிள்ளை மனித உரிமை தொடர்பிலான விசேட நிபுணர் குழுவின் இலங்கைக்கான விஜயத்திற்கு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுள்ளார். ஜெனிவா பிரேரணையின் 3 ஆவது ஷரத்துக்கமைய நியமிக்கப்பட்ட அதிகாரமுடைய விசேட நிபுணர் குழுவே இங்கு வரவுள்ளது. அதை விடுத்து வேறு எவரும் இங்கு வருவதற்கில்லை. மனித உரிமை ஆணைக் குழுவின் செயல் முறைக்கமைய ஐந்து வல்லரசு நாடுகளை சார்ந்த நிபுணர்கள் ஐவரை நியமிக்க முடியும். இதற்கு முன்பு சூடானில் யுத்தக் குற்றங்கள் தொடர்பான தகவல்களை அறிக்கையிடுவதற்காக இவ்வாறான நிபுணரொருவர் அந் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந் நிபுணரின் அறிக்கைக்கு அமையவே அந்நாட்டு ஜனாதிபதிக்கு எதிராக யுத்தக் குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. எனவே இலங்கைக்கும் இதே போன்ற "ட்ரோஜன்' குதிரை யொன்ரே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதென்பதில் எவ்விதச் சந்தேகமும் கிடையாது. எனவே நவ நீதம் பிள்ளைக்கோ, அவரது நிபுணர் குழுவிற்கோ இலங்கையில் காலடி எடுத்து வைக்க இடமளிக்க வேண்டாமென கேட்டுக் கொள்கிறோம். அவ்வாறு இடமளித்தால் எமக்கெதிரான ஜெனிவா பிரேரணையை முழுமையாக ஏற்றுக் கொண்டதாக அர்த்தம் படுமென்றும் அக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’