வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 12 மே, 2012

கடலோரக் காவல்படை கப்பல் மோதியதில் ஒரு மீனவர் பலி- மீனவர்கள் கொந்தளிப்பு- சாலை மறியல்



ராமேஸ்வரம் அருகே மீன்பிடி படகு மீது கடலோர காவல்படை கப்பல் மோதியதில் கால்வி என்ற மீனவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாம்பனைச் சேர்ந்த கால்வின் என்ற மீனவர் நடுக்கடலில் சக மீனவர்களுடன் நேற்று முன்தினம் மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது மண்டபம் நோக்கி சென்ற கடலோரக் காவல்படைக்குச் சொந்தமான கப்பல் கால்வினின் மீன்பிடி படகு மீது மோதியது.
இதில் நடுக்கடலில் படகு உடைந்து மூழ்கியது. படகில் இருந்த மீனவர்கள் கடலில் குதித்து பல மணிநேரமாக உதவிக்கு தவித்தனர். பின்னர் சக மீனவர்களின் மீன்பிடி படகில் ஏறி கரை சேர்ந்தனர். ஆனால் கால்வினின் கதி என்ன என்பது மட்டும் தெரியாமல் இருந்தது. இச்சம்பவத்தைக் கண்டித்து நேற்று மீனவர்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் படகு மூழ்கிய இடத்தில் கால்வினின் உடல் இன்று மீட்கப்பட்டது. இது மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து கடலோரக் காவல்படையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மதுரை- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது. தமிழக மீனவர்கள் இருவரை இத்தாலிய நாட்டு கடற்படைவீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்படதோ அதே நடவடிக்கையை இந்திய கடலோரக் காவல்படை கப்பல் அதிகாரிகள் மீது எடுக்க வேண்டும் என்பது மீனவர்களின் கோரிக்கை

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’