வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 11 ஏப்ரல், 2012

கடத்தல் பின்னணியில் ஜே.வி.பியும் இருக்கலாம் யார் அறிவர்?: அரசாங்கம்


மு ன்னிலை சோஷலிசக் கட்சியின் உறுப்பினர்கள் கடத்தப்பட்ட விவகார்தின் பின்னணியில் ஜே.வி.பி இருக்கக்கூடும் என அமைச்சரவை பேச்சாளரான லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே அவர்இவ்வாறு தெரிவித்தார்.
' இது தொடர்பாக நான் நிச்சயமாக சொல்லக்கூடியதெல்லாம். இதை செய்தது அரசாங்கம் அல்ல என்பதே. இதற்கு யார் பொறுப்பு என்பதற்கு ஊடகவியலாளர்களிடம் திமுது ஆட்டிகல கூறியதையே நான் கூற முடியும்' என அவர் தெரிவித்தார். "இந்நாட்டில் நடைபெறும் அனைத்தையும் பொலிஸார் பார்க்க முடியாது. அனைத்து சம்பவங்களையும் பொலிஸார் ஒரேடியாக பார்க்க முடியாது. இது உலகின் எந்த நாட்டிலும் நடைபெறுவதில்லை" என அவர் கூறினார். முழுநாடும் உசார் நிலையில் இருந்தபோது, கடத்தப்பட்டவர்கள் கொழும்பு நகர மத்தியில் இறக்கிவிடப்பட்டது எப்படி என கேட்டபோது, 'அவர்கள் எப்படி இறக்கிவிடப்பட்டார்கள் என்பது எமக்குத் தெரியாது. அதைப்பற்றி எமக்கு எதுவும் தெரியாது. அதை நாம் எப்படி தெரிந்துகொள்வது' என அமைச்சர் பதிலளித்தார். அரசாங்கத்திற்கும் சட்ட அமுலாக்கல் அதிகாரிகளுக்கும் தெரியாமல் ஆயுதக்குழுக்கள் இயங்குகின்றனவா செய்தியாளர்கள் வினவியபோது, 'இந்நாட்டில் ஆயுதப் போராட்டங்கள் நடைபெற்றன. ஆயுதங்களைக்கொண்டிருந்த இரு குழுக்கள் இந்நாட்டில் இருந்தன. எனவே அவற்றிலிருந்து பிரிந்த குழுக்கள் அல்லது இன்னும் செயற்படும் அவற்றின் எச்சங்கள் இருக்கக்கூடும்' என அவர் பதிலளித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’