வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 4 ஏப்ரல், 2012

சர்வதேசம் தேடும் கே.பி. அரச பாதுகாப்பில்



ற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் அரசாங்கம் ஏற்றுக் கொண்ட விடயங்கள் என்ன? நிராகரித்த விடயங்கள் என்ன? என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என்று ஐ.தே.க. எம்.பி.யான ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற ஜெனீவா தீர்மானம் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், சர்வதேச பொலிஸார் கே.பி.யை தேடுகின்றனர். தம்மிடம் ஒப்படைக்குமாறு இந்தியா கோரி நிற்கின்றது. எனினும் அரசாங்கத்தின் பாதுகாப்பிலேயே கே.பி. இருக்கின்றார். யுத்தத்தில் இடம்பெற்றதாகக் கூறப்பட்ட மீறல்களை விசாரிக்க வேண்டும் என்று கற்றறிந்த பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது. அதாவது இரு தரப்பினராலும் மீறப்பட்ட மீறல்களை விசாரிக்க வேண்டுமென்றே கூறியது ஆணைக்குழு. அவ்வாறு கூறினாலும் புலிகளின் தலைவர்களில் ஒருவரான கே.பி. எந்த நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தப்படாமல் அரசாங்கத்தின பாதுகாப்பிலேயே இருக்கின்றார். நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை சமர்ப்பித்து அதனை வரவேற்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உரையாற்றினார். இது தான் அரசின் நிலைப்பாடு என்று நாம் நினைக்கிறோம். இப்போது அதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறார். வெளிநாட்டு அமைச்சரின் கருத்துக் கூட அரசாங்கத்தின் கருத்தல்ல என்கின்றனர். 17 ஆவது திருத்தம் அகற்றப்பட்டு 18 ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டதன் விளைவாலே ஜெனீவா தலையீடுகள் ஏற்பட்டுள்ளன. 13 பிளஸ் தீர்வுத் திட்டம் அமுல்படுத்தப்படும் என்று இந்தியாவுக்கு கூறிவிட்டு இன்று மௌனமாக இருக்கின்றனர். 13 பிளஸ் படி தீர்வு காணப்படுமென ஜனாதிபதி இந்தியாவுக்கு வழங்கிய உறுதி மொழியை உங்களால் இல்லையெக் கூற முடியுமா? 2010 ஆம் ஆண்டு நல்லிணக்க ஆணைக்குழு வெளியிட்ட இடைக்கால அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளனவா? நிறைவேற்றப்பட்ட விடயங்கள் எவை? அன்று மஹிந்த ராஜபக்ஷவுடன் இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேசத்தில் பேசியவர் தான் தாமரா குணநாயகம் இன்றும் இலங்கைக்கு எதிராகப் பேசுகிறார். எமது நாட்டுப் பிரச்சினைக்கு அரசினால் மட்டும் தீர்வு காண முடியும் என்று நினைக்கக் கூடாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து எமது நாட்டை பாதுகாப்பதற்கு அரசாங்கம் முன் வர வேண்டும். அப்போது தான் ஜெனீவாவுக்கு எதிராக நாம் போராட முடியும் என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’