வெளிநாட்டு சக்திகளை உள்நாட்டு பிரச்சினைகளில் தலையிடுவதை தைரியமாக எதிர்க்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் அக்கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் இணைந்துகொள்ள வேண்டுமென அமைச்சர் விமல் வீரவன்ஸ் கோரியுள்ளார்.
நாடாளுமன்றதில் நேற்று ஜெனீவா பிரேரணை குறித்த விவாதத்தில் பேசுகையிலேயே விமல் வீரவன்ஸ இவ்வேண்டுகோளை விடுத்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியில் ஒரு கொள்கையில் மாற்றம் ஏற்படாவிட்டால், அக் கட்சி எதிர்காலத்தில் பின்னடைவை சந்திக்க நேரிடலாம் என்பதனை சுட்டிக்காட்டும்போதே அமைச்சர் இக்கருத்தினையும் தெரிவித்துள்ளார். 'ஐக்கிய தேசிய கட்சியினர் தம்மையும் கட்சியையும் பாதுகாத்துக் கொள்வதற்கு சஜித் பிரேமதாஸவுடன் இணைய வேண்டுமென விமல் வீரவன்ஸ கூறினார். பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தின் இறுதிக் கட்டத்தின் போது ஐக்கிய தேசியக் கட்சி யுத்தத்தை எதிர்த்தது. அக்கட்சி தேசிய விவகாரங்களில் இன்னும் அதேபோன்ற நிலைப்பாட்டையே பின்பற்றுகிறது. தேசிய பிரச்சினைகள் மற்றும் சர்வதேச சமூகம் தொடர்பான விவகாரங்களில் ஐ.தேக. கட்சி தற்போதைய நிலைப்பாட்டை தொடர்ந்தால் அக்கட்சி பாரதூரமான பின்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்' என அவர் கூறினார். 'எந்தவித அச்சமுமின்றி அமெரிக்கா மற்றும் ஐநாவிற்கு எதிர்ப்பை தெரிவிக்கும் உங்கள் பிரதித் தலைவருடன் நீங்கள் இணைய வேண்டும்' என அவர் கூறினார். அதேவேளை, ஜெனீவா பிரேரணை குறித்த விவாதத்தில் உரையாற்றுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவருக்கும் சந்தர்ப்பம் அளிக்குமாறு அக்கட்சியினருக்கு அமைச்சர் விமல் வீரவன்ஸ சவால் விடுத்தார். அமைச்சர் வீரவன்ஸவுக்கு ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி.பெரேரா பதிலளிக்கையில், குரூரமான பயங்கரவாத குழுவான எல்.ரி.ரி.ஈ.யை எதிர்ப்பதற்கு தனது கட்சி தயங்கவில்லை' என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’