வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 10 ஏப்ரல், 2012

இலங்கைக்கு அவுஸ்திரேலியா நன்றி தெரிவிப்பு



முன்னிலை சோஷலிசக் கட்சியின் தலைவரான குமார் குணரட்ணம் இலங்கையிலிருந்து சென்றுவிட்டார் என்பதை உறுதி செய்த அவுஸ்திரேலிய அதிகாரிகள், அவரின் பயணத்துக்கு உதவி வழங்கிய இலங்கை பொலிஸ் மற்றும் ஏனைய அமைப்புகளுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் கிரிபத்கொடை பகுதியில் காணாமல்போன, அவுஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த 42 வயது மனிதர் பாதுகாப்பாக உள்ளார். இவரை இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் விமான நிலையத்துக்கு அழைத்துச் சென்றார். இவர் இலங்கையிலிருந்து புறப்பட்டுச் செல்ல வசதி செய்து கொடுத்த பொலிஸ் மற்றும் வேறு அமைப்புகளுக்கு அவுஸ்திரேலிய அதிகாரிகள் நன்றி தெரிவித்துள்ளனர்' என தமிழ் மிரரின் சகோதர ஆங்கில இதழான டெய்லி மிரருக்கு அவுஸ்திரேலிய வெளிவிவகார மற்றும் வர்த்தக திணைக்களத்தின் பேச்சாளர் கூறினார். அவுஸ்திரேலியாவிலுள்ள இந்த நபரின் குடும்பத்துடன் கான்பெராவிலுள்ள கொன்சுலர் அதிகாரிகள் தொடர்புகொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’