வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 17 ஏப்ரல், 2012

அரசியல் தீர்வு குறித்து இந்திய எம்.பி.க்கள் கலந்துரையாடல்



நாடாளுமன்ற தெரிவுக்குழு மற்றும் தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு என்பன பற்றி, இந்திய எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் இலங்கை வந்துள்ள இந்திய நாடாளுமன்ற தூதுக்குழு, இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாடியுள்ளது.
வருகை தந்துள்ள தூதுக்குழுவுக்கும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸுக்கும் இடையில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலின் போது, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பெரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களித்தமை பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுலாக்குவது பற்றியும் அரசாங்கத்தின் முன்னுரிமைகள் பற்றியும் தூதுக்குழுவினருக்கு விளக்கினோம். புரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் தொடர் செயற்பாட்டில் பங்கெடுக்கவுள்ள அமைப்புக்கள் பற்றி அவர்களுக்கு நாம் விளக்கமளித்தோம். அவர்கள் கேட்ட கேள்விகள், இச்செயற்பாட்டுக்கு உதவுவதற்கான நேர்மையான ஆர்வத்தை வெளிப்படுத்தின என்று அமைச்சர் பீரிஸ் கூறினார். 13ஆவது திருத்தம் பற்றி குறிப்பாக எதுவும் பேசப்படாவிட்டாலும் அது நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைப்பதற்கான யாப்பு திருத்தங்களிலும் சேர்க்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். தூதுக்குழு எவ்வித அழுத்தத்தையும் பிரயோகிக்கவில்லை எனவும் இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்க செயல்முறைபற்றி அறிந்துகொள்ள இந்த சந்திப்பு ஒரு வாய்ப்பாக அமைந்தது எனவும் அவர் கூறினார். பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ, வடக்கில் நடைபெறும் அபிவிருத்தி வேலைகள் பற்றி தூதுக்குழுவினருக்கு விளக்கினார். இதன்பின், தூதுக்குழுவினர், நாடாளுமன்ற சபை முதல்வர் நிமல் சிறிபால டி சில்வாவையும் வேறு அரசாங்க எம்.பி.க்கள் சிலரையும் சந்தித்தனர். இலங்கைத் தமிழ் மக்களின் உண்மையான நிலை குறித்து தமிழ்நாட்டு மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் தமிழ்நாட்டில் போதிய பிரசித்தம் அளிக்கப்படுவதுடன் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டுமெனவும் தூதுக்குழுவினர் அமைச்சர் பஸில் ராஜபக்ஷவுக்கு தெரிவித்தனர். நிலையான சமாதானத்துக்கு இரண்டு சமுதாயங்களுக்கும் இடையேயுள்ள பரஸ்பர சந்தேகம் களையப்பட வேண்டும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்த தூதுக்குழுவினர் நாடாளுமன்றத்துக்கும் விஜயம் செய்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’