வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 30 ஏப்ரல், 2012

இலங்கையர் ஒருவருக்கு 15 வருடகால சிறை தண்டனை விதிக்க கோருகின்றது அமெரிக்கா



லங்கையில் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்குத் தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்யும் முயற்சியில் ஈடுபட்டு, தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட இலங்கையருக்கு 15 வருட சிறைத் தண்டனை விதிக்க வேண்டுமென அமெரிக்க நீதி திணைக்களம் கோரியுள்ளது.
தமிழீழ விடுதலைப் போராளிகளுக்காக பொருட்களை வாங்க முயன்றமையால் ரமணன் மயில்வாகனம் என்ற சந்தேகநபர் பாரிய குற்றத்தினை மேற்கொண்டுள்ளார் என அமெரிக்க வழக்குரைஞர் ஒருவரால் நியூயோர்க் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. கணிசமான, நீண்ட சிறைத்தண்டனை விதிக்கப்படாதுவிடின் சட்டத்துக்கான மதிப்பு கெடுப்பதாகிவிடும். எனவே ஒருவர் ஒரு பயங்கரவாத இயக்கத்துக்கு பொருள் ரீதியான உதவி வழங்கினாலும் கடும் தண்டனையிலிருந்து தப்பிக்கொள்ளலாம் என தெரிவிப்பது போல இது விளங்கிக்கொள்ளப்படும் என வழங்குரைஞர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கின் அச்சாணியான இலங்கை உள்நாட்டுப் போர் முடிந்துவிட்டது. மேலும் சந்தேகநபர், தீவிர அரசியல் நோக்கம் கொண்டவர் அல்ல. இவற்றைக் கருத்திற்கொண்டு மயில்வாகனம் ஏற்கனவே சிறையில் இருந்ததை தண்டனையாகக் கருதி அவரை விடுவிக்க வேண்டும் என்று குற்றஞ்சாட்டப்பட்டவர் சார்பில் ஆஜரான வழங்குரைஞர் நீதிபதியிடம் வேண்டிக்கொண்டுள்ளார். இவரது செயல் தனியொரு நிகழ்வு மட்டுமே. இவர் நிலைமை சரியாக புரியாமல் தவறுதலாக நடந்துள்ளார். மயில்வாகனம் ஒரு பாடத்தைப் படித்துவிட்டார். அவர் தனது செயலுக்காக உண்மையில் மனம் வருந்துகின்றார் என அவரது வழக்குரைஞரான ஜெரிபொவ் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து இந்த வழக்கு மீதான தீர்ப்பு எதிர்வரும் வெள்ளிக்கிழமை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கத்தினருக்கான இரவுப் பார்வைக் கண்ணாடி வாங்க முற்பட்டதாக 35 வயதான மயில்வாகனம் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். அத்துடன், புலிகள் இயக்கத்தினருக்காக கணனிகள், இலத்திரனியல் பாகங்கள் போன்ற சாதனங்களை வாங்க முயன்ற சுரேஷ் ஸ்ரீஸ்கந்தராஜாவுக்கு உதவியதாகவும் இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’