இலங்கை தமிழர் விவகாரம் தொடர்பாக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தில் இந்திய அரசின் நிலை என்ன என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் இலங்கை அரசின் போர்க்குற்றம் குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் தி.மு.க., அ.தி.முக, பா.ஜ., காங். மற்றும் இடதுசாரிகள் கட்சியை சேர்ந்த எம்.பி.இக்கள் ஒரு சேர இந்திய நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தனர். தொடர்ந்து அமளி ஏற்பட்டதால் அவை நடவடிக்கை பாதி்க்கப்பட்டது .
இதனால் ராஜ்யசபா , லோக்சபா மதியம் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. திஇமுஇகஇ தரப்பி்ல் திருச்சி சிவா, அ.தி.மு.க. எம்.பி., மைத்ரேயன், காங்கிரஸ் தரப்பில் ஞானசேகரன், இடதுசாரி தரப்பில் டி.ராஜா, பா.ஜ.இதரப்பில் வெங்கைய்யா நாயுடு ஆகியோர் இலங்கை தமிழர் பாதிக்கப்பட்டமை இலங்கை அரசின் செயற்பாடுகள் தொடர்பாக உரையாற்றினர். இதற்கு பதில் அளித்த மத்தி்ய நாடாளுனம்ற விவகாரத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சிலால், "இது குறித்து வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.எம்.. கிருஷ்ணாவுடன் கலந்து விவரங்களை கேட்டுள்ளேன். அறிக்கை வந்ததும் அரசு முழு விவரம் அளிக்கும். மேலும் கொண்டு வரப்படும் தீர்மானம் எத்தகையதாக இருக்கும் என்ற விவரம் இன்னும் அறியப்படவில்லை." என்றார். லோக்சபாவில் பதில் அளித்த மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி இந்த விஷயத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் இ எந்தவொரு தனிப்பட்ட தீர்மானத்திற்கும அரசு ஆதரவு அளிக்காது, இது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் கருணாநிதிக்கு பிரதமர் கடிதம் எழுதியுள்ளார் என்றும் கூறினார். இருப்பினும் அமளி நீடித்ததால் அவைகள் ஒத்தி வைக்கப்பட்டது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’