வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 14 மார்ச், 2012

இலங்கை போர்க் குற்றங்கள் விசாரணை அவசியமே


லங்கையில் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பாக சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம் என்று தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தில் பிரதமர் மன்மோகன்சிங் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக கருணாநிதிக்கு மன்மோகன் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது மனித உரிமைகள் மீறப்பட்டது தொடர்பாக இலங்கை அரசு நியமித்த நல்லிணக்க ஆணைக் குழு விசாரணை நடத்தி பரிந்துரைகளை வழங்கியுள்ளது. நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை இலங்கை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். இலங்கையில் தமிழர்கள் சுயமரியாதையுடன் சமத்துவத்துடன் வாழ வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பான புகார்கள் சுதந்திரமாக விசாரிக்கப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு என்றும் மன்மோகன் அதில் கூறியுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’