சிரியாவில் தற்போது நிலவும் நிலைமை வேதனை தரக்கூடியது எனத் தெரிவித்த பராக் ஒபாமா , அமெரிக்கா தனித்து அங்கு இராணுவத் தலையீடு செய்வது தவறாக அமையும் எனக் கூறினார். ஜனாதிபதி பஷார் அல் அஸாத் ஏனைய சர்வாதிகாரிகள் வீழ்ச்சியடைந்ததைப் போன்று வீழ்ச்சியடையவுள்ளார் எனத் தெரிவித்த பராக் ஒபாமா , சிரியாவை தனிமைப்படுத்துவதன் மூலம் அமெரிக்கா அதனை அடையும் எனக் கூறினார்.
சிரியா எங்கும் செவ்வாய்க்கிழமை உக்கிர மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் சிரியாவின் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வருவதில் சர்வதேச சமூகம் தொடர்ந்து பிரிவுபட்டு நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது. சிரியாவில் கடந்த 12 மாதங்களாக இடம்பெற்று வரும் வன்முறைகளில் 7,500 பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்கிறது. இந்த ஆண்டிலான ஒபாமாவின் முதலாவது செய்தியாளர் மாநாட்டின்போது தன்னைக் குற்றஞ்சாட்டுபவர்கள் போருக்கு செலுத்த வேண்டிய விலையை மறந்துவிடக் கூடாது என எச்சரித்துள்ளார். சிரியாவை லிபியாவுடன் ஒப்பிடுவதை நிராகரித்த அவர் சிரிய விவகாரம் மிகவும் சிக்கல் மிக்கது என்று கூறியுள்ளார். இந்நிலையில் சிரிய ஜனாதிபதி பஷார் அல் அஸாத் பயங்கரவாதத்துக்கு எதிராகத் தொடர்ந்து போராடப் போவதாக சூளுரைத்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’