ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இன்று மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் 27 வருட யுத்தத்திற்கு பின்னர் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு புத்துயிரளிக்கும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி ஹிலின்டன் தெரிவித்தார்.
இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை ஒன்பது மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து, அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி ஹிலின்டன் இலங்கை தொடர்பில் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையொன்றை கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயம் வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது, அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "நிரந்த நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் ஊடாகவே மாத்திரம் இலங்கையில் நிரந்தர சமாதனத்தை ஏற்படுத்த முடியும். இதற்கான சமிஞ்சையை ஐக்கிய அமெரிக்கா சர்வதேச சமூகத்துடன் இணைந்து வழங்கியுள்ளது. அத்துடன், வெளிநாட்டு சமூகம் உதவுதற்கு தயாரகவுள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கை மிக தெளிவாகவுள்ளது. கற்றுக்ககொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட ஆக்கபூர்வமான சிபாரிசுகளை இலங்கை அரசாங்கம் அமுல்படுத்துவதுடன் பொறுப்புகூறலுக்கு தேவையான நடவடிக்கையையும் எடுக்க வேண்டும். இது தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு சரியான இலக்கியை அடைவதற்கு உதவி செய்யவும் அமெரிக்கா தயாராகவுள்ளது. எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை விரைவில் சந்திக்கவுள்ளேன். இலங்கை அரசுடன் ஆக்கபூர்வமாக கலந்துரையாடல்களை மேற்கொள்ளவும் உறவினை தொடர்;ந்து கட்டியொழுப்பவுள்ளோம். அத்துடன் இலங்கை மக்களுடனான எங்களின் பங்கினையும் பலப்படுத்தவுள்ளோம்" என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’