வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 23 மார்ச், 2012

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சொந்த காணியை வழங்கியமை முன்னுதாரணமான பாராட்டுதலுக்குரியது - ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட காணியற்ற மக்களுக்கு ஒரு கோடி ரூபாவுக்கு மேல் பெறுமதியான தனது பதினைந்து ஏக்கர் காணியை வழங்கிய சுரேஸ் மேத்தர் அவர்களின் செயற்பாடு முன்னுதாரணமான பாராட்டுதலுக்குரியது என ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சநதிரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இன்றைய தினம் (23) கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவிலுள்ள இயக்கச்சி பனிக்கையடி கிராமத்தில் சுவிஸ் அபிவிருத்தி நிறுவனத்தின் நிரந்தர வீட்டுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் இது ஒரு உணர்பூர்வமான நிகழ்வு வழமையாக நாம் அரசினதும் அரசசார்பற்ற நிறுவனங்களினதும் உதவித்திட்டங்களை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வுகளிலேயே கலந்துகொள்வது வழக்கம் ஆனால் இன்று ஒரு தனியார் தனக்கு சொந்தமான காணியை காணியற்ற மக்களுக்கு வழங்கி வைத்து அதில் ஜந்து இலட்சம் ரூபா பெறுமதியான நிரந்தர வீட்டுத்திட்டத்தை ஆரம்பித்து வைப்பதில் நாம் பெருமிதம் அடைகின்றோம் ஒரு அங்குல நிலத்திற்காக அடிதடி நீதிமன்றம் என செல்லும் சமூகத்தில் சுரேஸ் மேதர் அவர்களின் இந்த செயற்பாடு எமது ஒரு முன்னுதாரணமானது, இந்த பிரதேசத்தில் ஒரு தனியாருக்கு ஜநூறு ஏக்கர் காணி உள்ளது அதே நேரம் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் 400 மேற்பட்ட காணியற்ற மக்கள் வாழ்கின்றனர் இந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு அடி நிலத்தைக்கூட இவர்கள் வழங்கத் தயாராக இல்லை தமிழ்த்தேசி;யம் தமிழர் உரிமைகள் பற்றியெல்லாம் மிகவும் அதிகமாக பேசுவார்கள் ஆனால் அந்த தமிழ் மக்களின் நலனுக்காக செயற்பாட்டு ரீதியில் எதனையும் செய்யமாட்டார்கள் எனத் தெரிவித்த பாராளுமன்ற சந்திரகுமார் அவர்கள் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தை பொறுத்தவரை எழுபது வீதமான வீட்டுப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது இதற்கு சுவிஸ் அபிவிருத்தி நிறுவனமே காரணம் பெறுமதி மிக்க அதிகளவான வீடுகளை விரைவாக அமைத்து மக்களுக்கு வழங்கியமை பாராட்;டப்படவேண்டியது எனவே மக்கள் சார்பாக நிறுவனத்தினருக்கு நன்றி கூறவேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும் குடியிருப்புக்கு தேவையான முன்பள்ளி பொதுநோக்கு மண்டபம் உள்ளிட்ட அனைத்து உட்கட்டுமானப்பணிகளும் நிறைவேற்றப்படும் அதற்கு முன்னதாக எம்மால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரண்டு உழவு இயந்திரங்களையும் உங்களுடைய மனித வலுவையும் பயன்படுத்தி உள் வீதிகளை தற்காலிமாக புனரமைத்துக் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார் இந்நிகழ்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் சத்தியசீலன் பிரதேச சபை உறுப்பினர்களான அன்ரன் அன்பழகன் தியாகராஜா உதவித் திட்டப் பணிப்பாளர் ஜெயக்குமார் காணியை அன்பளிப்புச்செய்த சுரேஸ்மேதர் சுவி;;ஸ் அபிவிருத்தி நிறுவன திட்ட முகாமையாளர் ரக்கேல் மற்றும் கிராம அலுவலர்கள் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.














0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’