கே.பி. குறித்து கேள்விகளை எழுப்புவதற்கு பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை அனுமதி மறுக்கப்பட்டது. பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது ஐ.தே.க. எம்.பி. யான ரவி கருணாநாயக்க கே.பி. தொடர்பிலான கேள்விகளை பிரதம அமைச்சரும் பௌத்த சாசன மத அலுவல்கள் அமைச்சரிடம் கேட்டிருந்தார்.
கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு எழுந்த ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன பெயர், விலாசம் இல்லாத நபரொருவர் தொடர்பில் கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. இக்கேள்வி எவ்வாறு ஒழுங்கு பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கிறது என்று எனக்கு தெரியாது என்பதுடன் முழுப் பெயர் விலாசம் உள்ளிட்ட முழுமையான விபரங்களுடன் கேள்விகளை கேட்டால் பதிலளிப்போம் என்றார். குறுக்கிட்ட சபாநாயகர் ராஜபக்ஷவும் முழுமையான விபரங்கள் இல்லாத கேள்விகளுக்கு பதிலளிப்பதில் சிக்கல்கள் இருக்கின்றன என்பதனால் குறைபாடுகளை நிவர்த்தி செய்து கேள்விகளை கேட்குமாறு கேட்டுக் கொண்டார். இடைமறித்த ரவி கருணாநாயக்க எம்.பி. அரச ஊடகங்களில் கே.பி. என்றுதானே எழுதப்பட்டிருக்கிறது. அரச தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளிலும் கே.பி. என்றே உச்சரிக்கப்படுகின்றது என்று சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு வந்தார். ஒழுங்குப் பத்திரத்தின் பிரகாரம் அரசியல் கட்சியொன்றை அமைக்கும் அளவிற்கு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு கே.பி.யை ஏன் அரசாங்கம் அனுமதிக்கின்றது? அவர் அரசாங்க செலவில் உலங்கு வானூர்தி மூலம் பயணம் செய்துள்ளாரா? என்றும் கேட்கப்பட்டிருந்தது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’