இ றுதிப் போரின் போது அமெரிக்கா பிரயோகித்த அழுத்தங்களுக்கு நாம் அடிபணிந்து செயற்படாததாலேயே இன்று ஜெனீவா வரை சென்று அந்நாடு எமக்குச் சவால் விடுக்கிறது. ஜெனீவா மாநாட்டில் எது நடந்தாலும் நாம் எமது நிலைப்பாட்டைத் தளர்த்திக்கொள்ளப் போவதில்லை. நாட்டின் கொள்கைகளையும் தாரை வார்க்க மாட்டோம் என இலங்கை அரசின் பிரதியமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன நேற்று திட்டவட்டமாக அறிவித்தார். ஜெனீவா விவகாரத்தால் இலங்கைக்கும் அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளுக்குமிடையிலான உறவில் எத்தகைய பாதிப்பும் ஏற்படாது. எதிர்காலத்தில் நாம் இணைந்தே செயலாற்றுவோம் என்றும் கூறினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர்
மாநாடு அரச தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றபோதே பதில் அமைச்சரவைப் பேச்சாளருமான லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன மேற்படி கருத்தைக் கூறினார்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’