அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமவைக் கொல்வதற்கு ஒசாமா பின்லேடன் திட்டமிட்டிருந்ததாகத் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் மிகப் பெரிய தற்கொலைப் படையொன்றைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தவும் ஒபாமாவை கொல்லவும் திட்டமிட்டிருந்ததாகத் தெரிய வந்துள்ளது. அபோதாபாத்தில் வைத்து ஒசாமா கொல்லப்பட்டதைத் தொடர்ந்து கைப்பற்றப்பட்ட பல முக்கிய ஆவணங்களில் உள்ள தகவல்களிலிருந்து இது தெரிய வந்துள்ளது. ஆப்கானிஸ்தானின் நேட்டோ படையின் கட்டளைத் தளபதி பெட்ரேயஸ் அவர்களையும் கொல்ல ஒசாமாவால் தீட்டப்பட்ட சதித்திட்டமும் இதன்போது அம்பலமாகியுள்ளது. எவ்வாறாயினும் இரட்டைக் கோபுரத் தாக்குதலைப் போன்ற இன்னுமொரு தாக்குதல் நடைபெற இருந்தது தடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கத் தரப்புக் கூறுகின்றது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’