தாய்லாந்தில் இன்று இடம்பெற்ற 3 குண்டுவெடிப்புகளில் 9 பேர் பலியானதுடன் 112 112 பேர் காயமடைந்துள்ளனர்.
தாய்லாந்தின் தென்பகுதியில் கிளர்ச்சிகளினால் பாதிக்கப்பட்டுள்ள பிரதான நகரான யாலவில் சில நிமிடங்கள் இடைவெளியில் இக்குண்டுவெடிப்புகள் இடம்பெற்றுள்ளன. இக்குண்டு வெடிப்புகளினால் பல கடைகள், வீடுகள் தீப்பற்றி எரிந்ததாகவும் கார்கள், வாகனங்களும் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ' 9 பேர் பலியாகியுள்ளனர் 112 பேர் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்" என யால மாகாண வைத்தியசாலையின் அவசரசேவைப் பிரிவைச் சேர்ந்த தாதியொருவர் ஏ.எவ்.பியிடம் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களில் 10 பேர் கடுமையான எரிகாயங்களுக்குள்ளாகி கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தாய்லாந்து சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. முதலாவது தாக்குதல் கார் குண்டுவெடிப்பாகும் எனவும் இரண்டாவது மற்றும் மூன்றாவது குண்டுகள் மோட்டார் சைக்கிள்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் வெடித்துள்ளதாகவும் தாய்லாந்து தென் பிராந்திய இராணுவ பேச்சாளர் பிரமோத் புரோமின் கூறியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’