வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 26 மார்ச், 2012

2000 ஆம் ஆண்டு விமானம் வீழ்ந்தமைக்கு புலிகளின் தாக்குதலே காரணம்



2000  ஆம் ஆண்டு பாதுகாப்பு படை உத்தியோகஸ்தர்கள் உட்பட 40 பேருடன் ஏ.என்.-26 ரக விமானமொன்று வில்பத்து காட்டில் வீழ்ந்தமைக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஏவுகணைத் தாக்குதலோ காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக வீழ்ந்ததாக அப்போது நம்பப்பட்டது. எனினும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவர் இவ்விமானத்தை சுட்டுவீழ்த்தியதாக ஒப்புக்கொண்டதையடுத்து இவ்விமான அனர்த்தம் குறித்த விசாரணையை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு மீள ஆரம்பித்துள்ளது. மேற்படி விமானம் காயமடைந்த சிப்பாய்கள் உட்பட பாதுகாப்பு படையினரை ஏற்றிச்செல்வதற்காக விமானப்படையினரால் பெறப்பட்டிருந்தது. பலாலியிலிருந்து அநுராதபுரத்திற்கு புறப்பட்டு 10 நிமிடங்களில் இவ்விமானம் வில்பத்து காட்டில் வீழ்ந்தது. இவ்விமானம் வீழ்வதற்குமுன் அதன் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக விமான ஊழியர்களால் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் விமான ஊழியர்கள் நால்வர் மற்றும் பாதுகாப்பு படையினர் 36 பேர் பலியாகினர். இவ்விமானத்தை வில்பத்து தேசிய பூங்காவிலுள்ள மறைவிடமொன்றிலிருந்து தோளில் சுமந்துசெல்லும் ஏவுகணையொன்றை பயன்படுத்தி தாக்கியதாக மேற்படி சந்தேக நபர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். இவர்கள் கிளிநொச்சியில் வைத்து இரு வாரங்களுக்குமுன் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்விரு சந்தேக நபர்களும் அநுராதபுரம் நீதிமன்றத்தில் விரைவில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’