காரணமின்றி இரவு நேரத்தில் வீதியில் சுற்றிக்கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சீனாவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு பத்து ரூபாவை அபராதமாக செலுத்துமாறு கொழும்பு நீதிமன்றமொன்று நேற்று அறிவித்துள்ளது.
கொள்ளுப்பிட்டிய கடற்கரையில் இரவு நேரத்தில் அலைந்து திரிந்த நிலையில் மேற்படி பெண் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இப்பெண் பொலிஸாரினால் கைது செய்யப்படும்போது தான் சுற்றித் திரிந்தமைக்கு முறையான காரணத்தை தெரிவிக்கவில்லையென நீதிமன்றில் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாடோடி கட்டளைச்சட்டத்தின் பிரிவு 3 (பி) இன் கீழ் தண்டனைக்குரிய குற்றமொன்றை அப்பெண் புரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அதையடுத்து மேற்படி பெண் 10 ரூபாயை அபராதத் தொகையாக செலுத்தவேண்டுமென நீதிபதி கனிஷ்க விஜேரட்ன கட்டளையிட்டுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’