குவைத் நாட்டுக்கு வேலைவாய்ப்புக்காகச் செல்லும் இலங்கைப் பணிப்பெண்கள், அந்நாட்டு எஜமானார்களினால் விபசாரத்துக்காக ஏலம் விடப்படுகின்றனர் என்று அங்கிருந்து நாடு திரும்பிய பணிப்பெண்களில் சிலர் தெரிவித்தனர்.
குவைத்தின் பரவேலியா, ஹவாலி, ஜஹாரா மற்றும் பானெல் போன்ற நகரங்களிலேயே இலங்கைப் பெண்கள் ஏலம் விடப்படுகின்றனர் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். குறித்த நகரங்களில் இலங்கைப் பெண்களை கதிரைகளில் அமரச்செய்து 500 முதல் 800 வரையான குவைத் தினார்களுக்கு (சுமார் இரண்டரை முதல் 3 இலட்ச ரூபா) அவர்களை ஏலம் விடுவதாக மேற்படி நாடு திரும்பியோர் குழு தெரிவித்தது. குவைத் மற்றும் சவூதி அரேபிய எஜமானார்களின் துன்புறுத்தல்களுக்கு உள்ளான நிலையில் தடுப்பு முகாம்கள் மற்றும் விடுதிகளில் தங்கவைக்கப்பட்டிருந்த 40 இலங்கைப் பணிப்பெண்கள் உட்பட 125 பேர் இன்று கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்தனர். இவ்வாறு நாடு திரும்பியவர்களே குவைத்தில் பணிப்பெண்கள் ஏலம் விடப்படுவதாக செய்தியினை வெளியிட்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’