ச த சாதனையை மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் இன்று நிகழ்த்துவார், அடுத்த போட்டியில் நிகழ்த்துவார் என்று எதிர்பார்த்து உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு தொடர் ஏமாற்றம் அளித்து வரும் சச்சின், விரைவில் ஓய்வு பெற வேண்டும் என்றும், இதை யார் சொன்னால் அவர் கேட்பார் என்று கிரிக்கெட் விமர்சகர் கூறிய கருத்து, அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது.
பிரபல கிரிக்கெட் விமர்சகர் ஜேமி ஆல்டர் இதுகுறித்து கூறியுள்ளதாவது, சச்சின் டெண்டுல்கர், சத சாதனை படைத்தால், நாம் அனைவரும் வரவேற்கத்தக்க ஒன்று தான். சச்சின் டெண்டுல்கர், கடந்த ஆண்டு நடைபெற்ற உலககோப்பை தொடரின் போது, மார்ச் மாதத்தில் நடைபெற்ற தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான போட்டியில் அவர் சதம் அடித்தார். ஆனால், அதற்காக, அவர் 1 ஆண்டுக்கு மேல் காலம் எடுத்துக் கொண்டது தான் வருத்தமளிக்கிறது. ஒரு கிரிக்கெட் வீரரின் சாதனைக்காக, தற்போது அவரது ரசிகர்கள், ஊடகங்கள் மற்றும் குறிப்பாக இந்திய கிரிக்கெட் அணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்காக, தற்போது நடைபெற்று வரும் முத்தரப்பு தொடரிலேயே, அணியில் அடிக்கடி மாற்றங்கள் செய்யப்பட்டு வரப்படுகிறது. இதனால், அணிவீரர்களில் நிலைத்தன்மையின்மை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சிறந்த வீரர்களை கொண்ட இந்திய அணியில், சச்சின் இடம்பெறும்போது, சிறந்த இளம் வீரர் ஒருவருக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இது, ஒருவரின் சாதனைக்காக (சுயநலத்திற்காக), மற்ற வீரரின் உரிமை மறுக்கப்படுவது போல் உள்ளது. சாதனை நாயகன் தான் : சச்சின் டெண்டுல்கர், சத சாதனையை நிகழ்த்தாவிடினும், அவர் சாதனை நாயகன் தான். கிரிக்கெட் வரலாற்றில், அளப்பரிய 4 சர்வதேச சாதனைகளை (டெஸ்ட் போட்டிகளில் 15,409 ரன்கள், 51 சதங்கள், ஒருநாள் போட்டிகளில் 18,111 ரன்கள் மற்றும் 48 சதங்கள்) தன்னகத்தே கொண்டுள்ள சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட் ரசிகர்ளுக்கு எப்போதுமே சாதனை நாயகன் தான். இவ்வாறு அவர் கூறினார். சச்சின் சத சாதனை வெகுநாட்களாக தள்ளிப்போய்க் கொண்டிருக்கும் வேளையில், கிரிக்கெட் விமர்சகரின் இந்த கருத்து, அவரது ரசிகர்களை மேலும் கவலைக்குள்ளதாக்கியுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’