வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 13 பிப்ரவரி, 2012

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை நல்லிணக்க ஆணைக்குழு முழுமையாக ஆராயவில்லை: அவுஸ்திரேலியா

சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் மீறப்பட்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை முழுமையாக ஆராயவில்லை என அவுஸ்திரேலியா இன்று விமர்சித்துள்ளது.
ஏற்கெனவே கனடா மற்றும் பிரித்தானிய அரசாங்கள், யுத்தில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினர் மீதுமான குற்றச்சாட்டுகள் குறித்து முறையாக விசாரிக்கவில்லை இந்த அறிக்கையை விமர்சித்திருந்தன. இந்நிலையில் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் கென் ரூட் இன்று திங்கட்கிழமை இது தொடர்பாக விடுத்த அறிக்கையொன்றில் இந்த அறிக்கை சில ஆக்கபூர்வமான முன்மொழிவுகளை செய்தபோதிலும் சர்வதேச மனித உரிமை சட்ட மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையாக ஆராயப்படவில்லை என தான் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார். 'மோதலின்போது இரு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் அனைத்து குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரணை நடத்துமாறு அவுஸ்திரேலிய அரசாங்கம் தொடர்ச்சியாக இலங்கையை வலியுறுத்துகிறது' எனவும் அவர் கூறியுள்ளார். எனினும் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் கோரவில்லை. 'குற்றச்சாட்டுகள் முழுமையாக ஆராயப்படாத நிலையில், அனைத்து குற்றச்சாட்டுகள்குறித்தும் வெளிப்படையான, சுயாதீனமான முறையில் விசாரிக்குமாறு இலங்கை அரசாங்கத்தை நாம் தொடர்ந்து கோருகிறோம்' என கெவின் ரூட் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’