வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 13 பிப்ரவரி, 2012

'பிரச்சினை தீர்க்கப்பட்டால் அரசியல் செய்யமுடியாது என்பதால் கூட்டமைப்பினர் தெரிவுக்குழுவில் இணைய மறுக்கின்றனர்'


நாடாளுமன்ற தெரிவுக் குழு ஊடாக பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை தீர்க்க முடியும். த.தே.கூட்டமைப்பினர் நாடாளுமன்ற தெரிவுக் குழவில் இணைந்து கொண்டால் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள முடியும.; ஆனால் கூட்டமைப்பினர் தெரிவுக் குழுவில் இணைந்து பிரச்சினை தீர்க்கப்பட்டால், அவர்களால் அரசியல் செய்ய முடியாது என்பதால் இணைய மாட்டார்கள். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண தெரிவுக்குழுவில் கூட்டமைப்பினர் இணைந்துகொள்ள வேண்டும்' என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
மட்டக்களப்பில் இன்று ஆரம்பிக்கப்பட்ட 'பாரம்பரியத்திற்கு மகுடம்' எனும் பாரம்பரிய மூலிகைக் கண்காட்சியில் பிரதம விருந்தினாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், இனப்பிரச்சினைக்கு நாடாளுமன்றத்தினுடாக தீர்வு காணமுடியும் என பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கூறும் கருத்துக்கு நான் உடன்படுகின்றேன். பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இதனை எனது அனுபவத்தினுடாகக் கூறுகின்றேன். 15 வருடத்திற்கு மேல் போராட்டத்தில் ஈடுபட்ட நான் ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கையிழந்து அரசியல் ஊடாக பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ளலாம் என தீர்மானித்து ஜனநாயக அரசியலுக்குள் நுளைந்தேன். இதுவரை எனது அரசியல் அனுபவத்தினுடாகவே பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் என்ற நம்பிக்கையை வெளியிடுகின்றேன். 1950 ஆண்டுமுதல் அரசியல் பேச்சி ஊடாக பிரச்சினை தீர்க்கப்படவில்லை என்பதால் 30 வருடத்தின் பின்னர் ஆயுதமேந்திப் போராட ஆரம்பித்தோம். அதிலும் எட்டாத நிலையில் தற்போது மூன்றாம் கட்டத்திற்கு வந்துள்ளோம். பேச்சுவார்த்தை ஊடாக பிரச்சினைக்குத் தீர்வு காண தெரிவுக் குழுவில் த.தே.கூட்டமைப்பினர் இணைந்து கொண்டால் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண முடியும். ஆனால் த.தே.கூட்டமைப்பினர் வீரம் பேசுவார்கள் பிரச்சினையை தீர்க்கவல்ல. தெரிவுக்குழு ஊடாக பிரச்சினை தீர்க்கப்பட்டால் அவர்களால் அரசியல் செய்யமுடியாது என்பதால். நாங்கள் மக்கள் பிரதிநிதியாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றோம் எமக்கும் ஜனாதிபதிக்குமிடையில் நெருக்கமான உறவு இருக்கிறது. பலமான அரசாங்கத்தினுடாக எதனையும் தீர்க்கலாம் கிடைக்கும் சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்த வேண்டும். ஒரே அடியாக முழுமையாக தீர்வு காணமுடியாது. கட்டம் கட்டமாக தீர்வு காணமுடியும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றேன்' என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’