வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

போலி ஆவணங்களை பயன்படுத்திய இலங்கையர் நால்வர் பிரித்தானிய சிறையில்


பிரிட்டனில் சட்டவிரோதமாக தங்கியிருப்பதற்காக போலி கடவுச்சீட்டுகளையும் அடையாள அட்டைகளையும் தயாரித்த குற்றச்சாட்டின் பேரில் இலங்கையர் நால்வர் பிரித்தானிய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
வட்போர்ட் இயூஸ்டன் அவெனியூவைச் சேர்ந்த மொஹமட் ஹுஸைன், அஸ்லம் றியாஸ், மொஹமட் பயாஸ் ஆகியோரும் ஹரோவ் நபரைச் சேர்ந்த மொஹமட் இப்ராஹிம் என்பவருமே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளனர். ஹூஸைனின் முகவரிக்கு அனுப்பப்பட்ட, போலி கடவுச்சீட்டுகள் மற்றும் அடையாள அட்டைகள் கொண்ட பொதியொன்றை லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் அதிகாரிகள் சோதனையிட்டதன் மூலம் இவர்களின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது. குறித்த முகவரியை சோதனையிட்ட பிரித்தானிய எல்லை முகவரக அதிகாரிகள் அங்கு றியாஸ், பயாஸ், இப்ராஹிம் ஆகிய பெயர்களில் போலி ஆவணங்களைக் கண்டுபிடித்தனர். ஹுஸைன், றியாஸ், இப்ராஹிம் ஆகியோர் விஸா காலாவதியானபின் பிரிட்டனில் தங்கியிருந்ததாக பிரித்தானிய எல்லை முகவரகத்தினர் தெரிவித்துள்ளனர். பயாஸ் கைது செய்யப்பட்டபோது அவர் செல்லுபடியான மாணவர் விஸாவை வைத்திருந்தார். தகுதியற்றோர் சட்டவிரோதமாக பிரிட்டனில் தங்கியிருந்து தொழில்வாய்ப்புகளை பெற்றுக்கொள்வதற்காக ஹுஸைன் போலி ஆவணங்களை விநியோகித்தார் என பிரித்தானிய எல்லை முகவரக பரிசோதகர், அன்டி ரட்கிளிவ் கூறியுள்ளார். இந்த போலி ஆவணங்கள் உயர்தரமானவையாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.29 வயதான ஹுஸைனுக்கு 13 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அஸ்லம் றியாஸ் (27), மொஹமட் பயாஸ் (21) ஆகியோருக்கு 12 மாத சிறைத்தண்டனையும் இப்ராஹிமுக்கு 6 மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. சிறைத்தண்டனைக்காலம் முடிவடைந்தவுடன் இவர்கள் நாடுகடத்தப்படுவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’