வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 9 ஜனவரி, 2012

'அரசியல் தீர்வுக்காக இலங்கைக்கு கனேடிய அரசாங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டும்'


லங்கையில் அரசியல் தீர்வை கொண்டுவருவதற்கு கனேடிய அரசாங்கம் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என யாழ். ஆயர் தோமஸ் சவுந்தரநாயம் இன்று திங்கட்கிழமை வேண்டுகோள் விடுத்துள்ளார்
யாழ். ஆயர் இல்லத்தில் இன்று திங்கட்கிழமை மாலை கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்களான சுங்ஸென் லியூங் மற்றும் ஜோன் டானியல் ஆகியோர் யாழ். ஆயரை சந்தித்து பேச்சு நடத்தினர் இதன்போது யாழ். ஆயர் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த யாழ். ஆயர், "இலங்கை அரசாங்கமானது யாழில் மீள்கட்டுமானங்களை செய்து வருகிறது. வீதி அபிவிருத்தி மற்றும் மீள்குடியேற்றம் போன்ற நல்ல விடையங்களை எல்லாம் செய்து வருகிறது. இது வரவேற்றகத்தக்கது 30 வருட காலமாக செய்யப்படாத வேலைத்திட்டங்கள், அலுவல்கள் எல்லாம் தற்போது நடைபெற்று வருகின்றன. எனினும், மக்களின் மனங்களில் அமைதியில்லை. கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுகளில் மக்கள் வாழ்வதற்கு வீடுகள் இன்றி இருக்கிறார்கள். யாழில் படித்த வாலிபர்களுக்கு வேலையில்லை. அவர்கள் வேலை செய்வதற்குரிய தொழிற்சாலைகளை யாழில் கனேடிய அரசு நிறுவ வேண்டும். யாழில் சுத்தமான குடிநீர் கிடைப்பது பெரும் தட்டுப்பாடாக உள்ளது. இதனை நிவர்த்தி செய்ய வேண்டும்" என கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’