வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 7 ஜனவரி, 2012

பிக்குவின் ஆடைக்குள் வெடிகுண்டு இருந்ததை கண்டுபிடிக்கத் தவறிய 8 பொலிஸார் இடமாற்றம்


சிலாபம் நீதிமன்ற நீதிபதியின் உத்தியோகபூர்வ அறையின் அருகில் கைக்குண்டு ஒன்றைக் கையில் வைத்துக் கொண்டு கலகம் விளைவித்த பௌத்த பிக்கு தொடர்பில் சட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்த தவறிய குற்றச்சாட்டில் சிலாபம் மற்றும் கருவலகஸ்வெள பொலிஸ் நிலையங்களின் எட்டு பொலிஸார் உடனடியாக அமுலாகும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இருவர் வேலை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். வடமேல் மாகாண சிரேஷ்ட உதவி பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தரவினால் இந்த உத்தரவு நேற்று முன்தினம் இரவு வழங்கப்பட்டுள்ளது.
சிலாபம் பொலிஸ் நிலையத்தின் இருவரின் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், மேலும் நால்வருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. கருவலகஸ்வௌ பொலிஸ் நிலையத்தின் நான்கு பொலிஸாரும் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் குருநாகல் மாவட்டத்தின் பொலிஸ் நிலையங்களுக்கே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சிலாபம் கரவிட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள பௌத்த விகாரை ஒன்றில் தங்கயிருந்த இரு பௌத்த பிக்குகள் அங்கிருந்த பெறுமதியான பொருட்களுடன் வெளியேறி கருவலகஸ்வௌ பிரதேச விகாரை ஒன்றில் தங்கியிருந்த சமயம் கருவலகஸ்வௌ பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர். அதனைத் தொடர்ந்து இவர்கள் சிலாபம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு கடந்த புதன்கிழமை நீதிபதியின் முன் ஆஜர்படுத்தப்பட்டு பிணை வழங்கப்பட்டது. அவர்களில் ஒரு பிக்கு தனது ஆடையில் மறைத்து வைத்திருந்த கைக்குண்டைக் கையில் எடுத்துக்கொண்டு மீண்டும் நீதிபதியின் அறையை நோக்கிச் செல்ல முற்பட்ட போது பொலிஸாரால் மடக்கிப் பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தார். இந்த பிக்குகள் கருவலகஸ்வௌ பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சிலாபம் பொலிஸாரினால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் வரை அவர்களை உரிய முறையில் பரிசோதிக்காது கடமை தவறிய காரணத்தினாலேயே இவ்வாறு பணிநிறுத்தம் மற்றும் இடமாற்ற உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’