வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 30 ஜனவரி, 2012

1000 பாடசாலைகள் திட்டம் தோல்வி: ஜே.வி.பி.


ரசாங்கத்தின் 1000 பாடசாலைகள் அபிவிருத்தித் திட்டம் தோல்வியைத் தழுவியுள்ளதாக கூறியுள்ள ஜேவி.வி.பி. இத்திட்டத்தை அரசாங்கம் உடன் ரத்துச்செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 1000 பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படுவதாக அரசாங்கம் கூறினாலும் இதற்காக பின்பற்றப்படும் முறைமைகள் ஒருவருக்கும் தெரியாது என நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க கூறினார்.
இப்பாடசாலைகளைத் தெரிவு செய்வதில் சனத்தொகை அடர்த்தி, புவியியல் சூழ்நிலை, இனத்துவ பன்மை தன்மை ஆகியன கவனத்திற் கொள்ளப்பட்டனவா என அநுரகுமார திஸாநாயக்க கேள்வி எழுப்பினார். 'இவற்றில் எதுவுமே கவனத்திற்கொள்ளப்படவில்லை என்பதை நாம் அறிவோம். அரசியல்வாதிகளின் சிபாரிசின் அடிப்படையில் பாடசாலைகள் தெரிவுசெய்யப்பட்டன' என அவர் கூறினார். எனினும் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில், மேற்படி பாடசாலைகள் விஞ்ஞான ரீதியான ஆய்வுகளின்பின்னர் தெரிவுசெய்யப்பட்டவை எனவம் எனவே இத்தெரிவுமுறை குறித்து யாரும் ஆட்சேபிக்க முடியாது எனவும் கூறினார். மொத்தமாக 6000 பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். "50 பேரைவிட குறைந்த மாணவர்களைக் கொண்ட 1552 பாடசாலைகள் உள்ளன. அவற்றுக்காக ஜனாதிபதி செயலகம் தனியான திட்டமொன்றை ஆரம்பித்து மாகாண சபைகளுடன் இணைந்து அமுல்படுத்தவுள்ளது. அப்பாடசாலைகள் மூடப்பட மாட்டா" என அமைச்சர் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’