வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 30 டிசம்பர், 2011

யாழ் - கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கிளிநொச்சியில் நடைபெற்றது


யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களுக்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இம்முறை கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்றது.
கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய மண்டபத்தில் நடைபெற்ற இக் கூட்டத்திற்கு ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களான பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ சந்திரசிறி அவர்களும் தலைமை தாங்கினர். ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர்களான முருகேசு சந்திரகுமார் சில்வேஸ்த்திரி அலன்ரின் (உதயன்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான விநாயகமூர்த்தி மற்றும் சிறிதரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். மீள்குடியேற்றம் மிதிவெடி அகற்றல் வீதி அபிவிருத்திகள் விவசாயம் கல்வி சுகாதாரம் மின்சாரம் பொது வசதிகள் போன்ற முக்கிய பல்வேறு துறைகள் தொடர்பில் இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டன. 2012 ம் வருடத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத் திட்டங்கள் தொடர்பிலும் அவதானஞ் செலுத்தப்பட்டது. இதுகாலவரையில் இப்பகுதியில் அனைத்துத் துறைசார் அபிவிருத்திக்கும் பக்கபலமாக நின்று உழைத்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கும் ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறி அவர்களுக்கும் இக் கூட்டத்தின் போது நன்றி தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் வடமாகண பிரதம செயலாளர் திருமதி விஜயலக்ஷ்மி யாழ்.மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் பாதுகாப்பு உயரதிகாரிகள் பிரதேச செயலாளர்கள் பிரதேச சபைகளின் தலைவர்கள் செயலாளர்கள் அரச அதிகாரிகள் துறைசார் அதிகாரிகள் பொதுமக்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.



















0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’